பக்கம்:பொன் விலங்கு.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 643

ராஜிநாமாவைக் கொடுக்கலாம். நான் எல்லா விவரமும் சொல்கிறேன்" என்று கூறியிருந்தார் கலெக்டர். சந்தர்ப்பங்களும், அனுபவங்களும் மாறி வாய்ப்புகள் அணுகும் போது மனித வாழ்க்கை மிக வேகமாக ஓடிவிடுவது போல் அவசரப்படுகிறது. எல்லாம் விரைந்து நடைபெறுவது போல் ஒரு பிரமை உண்டாகிறது. இப்போது சத்தியமூர்த்திக்கும் அந்தப் பிரமை உண்டாகியது.

>k

இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் வாழ வேண்டும் என்கின்ற ஆசைகள் ஒரு புறமும் வாழ்வதற்கு வேண்டிய செளகரி யங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன.

மாறுதலும் விரைவும் மிக நெருங்கிய உறவினர்கள் போல் இருக்கிறது. அதனால்தான் சந்தர்ப்பங்கள் மாறும் போது வாழ்க்கையே மிகவும் வேகமாக ஓடிவிடும் போல் தோன்றுகிறது.

'என்னைதான் விரோதம் வந்து விட்டாலும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் நீ இதைச் செய்யலாமா? என்னமோ போ: வீட்டோடு ஒட்டாமல் போயாச்சு" என்று அம்மா கண்கலங்கி விடை கொடுத்த போதும், தங்கைகள் ஏறக்குறைய அழுகிற நிலைக்கு மனம் வருந்தியதையும் கண்டும் காணாதவனாகப் புறப்பட்டுவிட்டான் சத்தியமூர்த்தி. கலெக்டர் இரயில் நிலையத்துக்கு வந்து வாழ்த்துக்கூறி அவனை வழியனுப்பினார்.

மல்லிகைப்பந்தல் ரோடுநிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் வண்டி மூன்று நிமிடங்கள் நின்றது. குமரப்பன் மலைக்குப் பஸ் ஏறுவதற்காக அங்கே இறங்கிக் கொண்டான். மறுநாள் காலை சத்தியமூர்த்தி சென்னையை அடையும்போது இரயில் இரண்டரை மணிநேர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/645&oldid=595912" இலிருந்து மீள்விக்கப்பட்டது