பக்கம்:பொன் விலங்கு.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 பொன் விலங்கு

தாமதத்தோடு ஒன்பதே முக்கால் மணிக்கு எழும்பூருக்குப் போய்ச் சேர்ந்ததனால் நிலையத்திலேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு அவசரம் அவசரமாகச் சென்டிரல் நிலையத்துக்குப் போய் கிராண்ட்டிரங் எக்ஸ்பிரலைப் பிடிப்பதற்குத்தான் நேரம் சரியாயிருந்தது. கலெக்டர்கடிதம் கொடுத்துச்சொல்லியனுப்பியிருந்த சென்னைப் பிரமுகர்களை டில்லியிலிருந்து திரும்பும்போதுதான் பார்க்க முடியுமென்று தோன்றியது. பாரதத்தின் தலைநகருக்குத் தமிழ்நாட்டின்தலைநகரிலிருந்து புறப்படும் கிராண்ட்டிரங்எக்ஸ்பிரஸ் தனக்குரிய சகலவிதமான கம்பீரங்களுடன் ஒன்றே முக்கால் நாள் ஓடி அலுத்த களைப்போடு டெல்லி மாநகரை அடைந்தபோதுடெல்லியிலுள்ள மதராஸி ஓட்டல் ஆட்கள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தை முற்றுகையிட்டுக்கிராக்கிபிடிப்பதற்குப் பறந்தார்கள். மறுநாள் காலையில் இன்டர்வ்யூ களைப்பாக இருந்ததனால் ஓய்வு கொள்ள விரும்பிய சத்தியமூர்த்தி ஸ்டேஷனுக்கு வந்திருந்த ஹோட்டல் ஏஜண்டுகளில் யாரோ ஒருவரோடு புறப்பட்டுப் போய் மலிவான ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கினான். கையில் பணம் குறைவாகக் கொண்டு வந்திருந்ததனால் இன்டர்வ்யூ முடிந்ததும் அடுத்த இரயிலில் திரும்பத் திட்டம் போட்டு ஸ்டேஷனில் இறங்கியதும் முன்னேற்பாடாகத் திரும்புவதற்கு டிக்கட் கூட எடுத்தாயிற்று. -

ஜெர்மன் தூதராலயத்தில் மறுநாள் காலையில் நிகழ்ந்த இன்டர்வ்யூவுக்கு மொத்தம் ஏழு பேர் வந்திருந்தார்கள். அதில் சத்தியமூர்த்தி உள்பட மூவர் முதல் வகுப்பில் தேறிய ஆனர்ஸ் பட்டதாரிகள். இருவர் வேறும் எம்.ஏ.க்கள், இன்னும் இருவர் வெறும் பி.ஓ.எல். தகுதி மட்டுமே உடையவர்கள். இன்டர்வ்யூவில் தூதராலயத்தைச் சேர்ந்தவர்கள் உலக அரசியல், நிலவியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டனர். மற்றவர்கள் மொழியியல் பற்றிச் சில கேள்விகள் கேட்டார்கள். சத்தியமூர்த்தி திருப்திகரமாகவும் நன்றாகவும் மறுமொழிகளைக் கூறினான். இண்டர்வ்யூ முடிந்ததும் கலெக்டரின் அறிமுகக் கடிதங்களுக்குரியவர்கள் சிலரைச் சந்தித்தான். எல்லாரும் நீங்கள் தேர்ந்தெடுக்கப் பெறுவது உறுதி.

f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/646&oldid=595913" இலிருந்து மீள்விக்கப்பட்டது