பக்கம்:பொன் விலங்கு.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 645

அதில் சந்தேகமே படவேண்டாம் என்ற தோரணையில் அவனிடம் நம்பிக்கையளித்துப் பேசினார்கள். அங்கிருந்தே கலெக்டருக்கும் நண்பன் குமரப்பனுக்கும் கடிதங்கள் எழுதினான் சத்தியமூர்த்தி. திரும்பும்போது மதுரையைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர் ஒருவரை நிலையத்தில் இரயிலேறுகையில் தற்செயலாக அவன் சந்திக்க நேர்ந்தது. அவரை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான் அவன். அவரும் அவன் வந்த காரியத்தை அறிந்து அவனை மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

'அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இரண்டாவது உலகப்போருக்குப் பின் அமெரிக்க ஐரோப்பிய உதவிகளும் தன் சொந்தத் திறமையும் சேர்ந்து மேற்கு ஜெர்மனியை இணையிலா வளர்ச்சியடையச் செய்துவிட்டன. அப்படி வளர்ந்த நாடுகளுக்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் சென்று திரும்புவது பல துறைகளில் வளராத இந்த நாட்டுக்கு எவ்வளவோ பயன்படும். நாம் இன்னும் எவ்வளவோ வளரவேண்டும். வளரவேண்டும் என்னும் உணர்வு வருவதற்கு முதலில் வளர்ந்திருப்பவர்களை கண் திறந்து பார்க்க வேண்டும்" என்று அவனை உற்சாகமூட்டுவதற்காக மேற்கு ஜெர்மனியைப் பற்றிய புதுமைகளை புகழ்ந்து கூறத் தொடங்கியிருந்தார் அந்தப் பார்லிமென்ட் உறுப்பினர். அவர் முதல் வகுப்பிலும் அவன் மூன்றாம் வகுப்பிலுமாகப் பயணம் செய்தாலும், பயணத்தினிடையில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். சென்னையில் ஒருநாள் தங்கி மாக்ஸ்முல்லர் பவனிலும் ஜெர்மன் கான்ஸல் ஜெனரல் அலுவலகத்திலும் - இந்தோ-ஜெர்மன் கல்ச்சுரல் சென்டர் ஆஃப் கதே இன்ஸ்டிடியூட்சென்னைக் கிளையிலும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்தான் அவன். - -

சத்தியமூர்த்தி மதுரை திரும்பிய தினத்தன்று கலெக்டர் ஊரில் இல்லை. எங்கோ முகாமில் இருந்தார். மதுரையிலிருந்தே கடிதம் மூலம் மல்லிகைப் பந்தல் கல்லூரிக்கு லீவை இன்னும் இரண்டு நாட்கள் வளர்த்து எழுதினான் சத்தியமூர்த்தி. மறுநாள் கலெக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/647&oldid=595914" இலிருந்து மீள்விக்கப்பட்டது