பக்கம்:பொன் விலங்கு.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 647

சத்தியமூர்த்தி மதுரைக்கும் சென்னைக்கும் டில்லிக்கும் போய் விட்டுத் திரும்புவதற்குள் மல்லிகைப் பந்தலில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்திருந்தன. ஜமீன்தார் உடல்நிலை தேறி எழுந்திருந்தார். பாரதி தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு இரண்டுநாள் ஆகியிருந்தன. மல்லிகைப் பந்தல் நகரின் மற்றொரு பகுதியில் மாபெரும் தோட்டத்துக்கிடையே இருந்த மஞ்சள்பட்டி ஜமீன் மாளிகை சில இடங்களில் புதுப்பித்துக் கட்டப்பெற்றுக் கவர்ச்சிகரமான டிஸ்டெம்பர் பூச்சுடன் செப்பனிடப்பட்டிருந்தது. நவீன் மின் விளக்கு அழகுகளும், புதுப் புது மேஜை நாற்காலிகளும், சோபாக்களும்,கட்டில்களும்,மெத்தைகளும்,வாங்கிப்போட்டுஅழகு மாளிகையினை அரண்மனையாக்கியிருந்தார் கண்ணாயிரம். இதற்காகப் பட்டினத்திலிருந்து இரண்டு லாரிகள் நிறைய சோபா, நாற்காலிகள் முக்கிய மரச்சாமான்களும் சுவரில் பதிப்பதற்கான பெல்ஜியம் கண்ணாடிகளும் வந்திருந்தன. செளகரியமுள்ளவர் களுக்குக் கிராமமும் பட்டினம்தான். ஏனென்றால், செளகரிய மில்லாதவர்கள் பட்டினத்திலும் கிராமத்தின் அசெளகரியங்களை அடைகிறார்கள். செளகரியமுள்ளவர்கள் கிராமத்திலும் பட்டினத்தின் வசதிகளை அடைய முடிகிறது. இறைக்க இறைக்க ஊறும் பேய் ஊற்றைப்போல் ஜமீன் ஒழிப்புக்குப் பின்னும் ஜமீன்தாரிடம் பணம் ஊறிக்கொண்டிருந்தது. அவர் விரும்பிய செளகரியங்கள் எல்லாம் இருக்குமிடத்தைத் தேடிவந்தன. ஒவ்வொரு பெரிய ஊரிலும் அந்தத் தனிமனிதருக்கு மாபெரும் தியேட்டர்களைப் போல் பெரிய வீடுகள்

பல பங்களாக்களிலிருக்கும் கார் ஷெட்டுகளை விடச் சிறிய மோசமான குடிசைகளில் இந்தத் தேசத்து ஏழைகள் குழந்தை குட்டிகளோடு மூச்சுத்திணறிச் சாகிறார்கள். அதே சமயத்தில் இரண்டொரு மனிதர்களே வசிக்கும் சில பங்களாக்களில் மனிதர்களுக்காக வெளியே இருக்கும் குடியிருப்புகளை விட அழகான கார் ஷெட்டுகள் இருக்கின்றன. வரவர இது ஒரு வேடிக்கையான இரண்டுங்கெட்டான் தேசமாகி விட்டது எளிமையிலும் முழுமையாக நம்பிக்கை இல்லை, ஆடம்பரத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/649&oldid=595916" இலிருந்து மீள்விக்கப்பட்டது