பக்கம்:பொன் விலங்கு.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 649

மட்டுமே வளர முடியும் என்று அடிக்கடி சொல்லிவந்த வேளையில் கூட நவநீத கவியின் இந்தப் பழைய சொற்பொழிவைத்தான் சத்தியமூர்த்தியால் நினைக்க முடிந்தது. பொது வாழ்வில் தனி மனிதனுடைய சமுதாய அந்தஸ்து உயராத வரை இந்தியா வளரவும் வாழவும் வழியில்லை என்று எண்ணினான் அவன். இந்த விநாடி வரையில் பணத்தோடும், செல்வாக்கோடும், பதவியோடும் சேர்ந்திருக்கிற மனிதனைத் தவிர குணத்தோடும், நியாய நேர்மைகளோடும் சேர்ந்திருக்கிற மனிதனுக்குச் சமுதாய அந்தஸ்து என்பதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சத்தியமூர்த்தி ஆசைப்பட்டான். எனவே பலவிதத்திலும் வளர்ச்சியடைந்த நாடு ஒன்றின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் போய் இரண்டாண்டுகள் இருக்கப் போகிறோம் என்ற வாய்ப்பை அவன் மனம் ஒவ்வொரு விநாடியும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. -

ஆனால் இத்தனை எண்ணங்களுக்கும் நடுவே மோகினி தன்னை ஏமாற்றிவிட்டாள் என்ற வேதனையும் ஆறாததோர் பச்சைப் பசும் புண்ணாக அவன் மனத்தில் ஊறிப் போயிருந்தது. முன்பு ஒரு நாள் நண்பன் குமரப்பனிடம் பேசும்போது ஐ கேன் டை வித் ஹெர் - பட் நாட் லிவ் வித்அவுட் ஹெர்' என்று அவன் மோகினியைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டுக் கூறியிருந்தான். அன்று தான் இப்படிக் கூறியதைக் கேட்டு, 'உண்மையான அன்புஅதாவது காதல் கூடப் பல சமயங்களில் மனிதன் தனக்குப் பூட்டிக்கொள்ளும் விலைமதிப்பற்ற விலங்காகத்தான் இருக்கிறது. உண்மையான அன்புதான் கயளை லைலாவுக்காகப் பைத்தியம்பிடித்து அலைய வைத்தது. தேவதாலைப் பாருவுக்காக இரத்தம் கக்கிச் சாகவைத்தது, அம்பிகாபதியைக் கழுவேற்றியது. உன்னுடைய காதலுக்கு முன்பாக வந்து நிற்கும் பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் பார்க்கும்போது என் உயிர் நண்பனாகிய நீ இன்னும் முகத்தில் ஒளியிழந்து கண்களில் சிந்தனை தேங்கிக் கால்கள் நடை சோர்ந்து வாழ்க்கை வீதியில் அலைய நேரிடுமே என்றுதான் பரிதாபமாக இருக்கிறது' என்று குமரப்பன் சிரித்துக்கொண்டே பதில் சொல்லியிருந்ததை சத்திய மூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். பெண்ணின் அன்பு என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/651&oldid=595919" இலிருந்து மீள்விக்கப்பட்டது