பக்கம்:பொன் விலங்கு.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 பொன் விலங்கு

நினைவுகளும், எதிர்கால நோக்கமும் எப்படி எப்படி ஒடுகின்றன என்பதை எண்ணியபோது அவளுக்குப் பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. பாரதியோ "கவலைப்படாதீர்கள் அக்கா! என் உடம்பில் உயிர் உள்ள வரை நாள் உங்களைத் தனியாகவோ, நிராதரவாகவோ விட்டுவிடமாட்டேன். யார் என்ன வேண்டுமானாலும் கனவு காணட்டும். நீங்கள் தைரியமாக இருந்தால் போதும்" என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள். கணக்குப்பிள்ளைக் கிழவரோடு காரில் மஞ்சள்பட்டி, மதுரை எல்லாம் போய் அந்தக் கிழவரை மதுரையிலேயே விட்டுவிட்டுத் திரும்பியிருந்த கண்ணாயிரம் திடீரென்று ஒருநாள் மாலை வைரமும், தங்கமுமாக நகைப்பெட்டிகளைக் கொண்டு வந்து மோகினியிடம் காண்பித்து, 'இதெல்லாம் உனக்குப் பிடிச்சிருக்கான்னு ஜமீன்தார் கேட்கச் சொன்னார்' என்று வினவியபோது 'எனக்கு நீங்க செய்யறது எதுவுமே பிடிக்கவில்லை' என்று அழுதுகொண்டே உள்ளே எழுந்து சென்றுவிட்டாள் அவள். தன்னை ஏமாற்றிவிட்டு அங்கு ஏதோ மர்மமாக ஏற்பாடுகள் நடப்பதைக் கண்டு மோகினி பதறினாள். ஆனால் பாரதி மட்டும் துணிவோடு தைரியமாக இருந்தாள். ஜமீன்தாரும் மோகினியும் சேர்ந்து எடுத்துக் கொண்டாற்போல் தந்திரமாகச் செய்து மாட்டியிருந்த அந்தப் போலிப் படத்தை அவளே துணிந்து கழற்றி எறிந்தபோது கண்ணாயிரம் வந்து ஏதோ இரைந்தார். "மிஸ்டர் கண்ணாயிரம் இது யாருடைய வீடு தெரியுமா? அதிகம் பேசினீரோ உமக்கு நடக்கிற மரியாதைவேற..." என்று பாரதி ஒரு அதட்டு அதட்டியதும் வாலைச் சுருட்டிக்கொண்டு பேசாமல் போய்ச் சேர்ந்தார் கண்ணாயிரம்.

டில்லியில் இன்ட்ர்வ்யூ முடிந்து, மதுரை வந்து ஓரிரு நாள் தங்கிவிட்டு சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பிய சில தினங்களிலேயே அவர் வெளிநாட்டு சர்வகலாசாலைக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தோடு மொழியியல் துறை ஆராய்ச்சிக்காகப் போனாலும் போகலாம் என்ற செய்தி பராபரியாகப் பாரதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/654&oldid=595922" இலிருந்து மீள்விக்கப்பட்டது