பக்கம்:பொன் விலங்கு.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 653

காதிலும் விழுந்தது. வேண்டுமென்றே இதை அவள் மோகினியிடம் சொல்லவில்லை. ஏற்கெனவே மனம் உடைந்து போயிருக்கிறவள் இதைக் கேட்டு இன்னும் மனம் உடைந்து போவாள் என்ற தயக்கத்தோடுதான் மோகினியிடம் இதைச் சொல்லாமல் இருந்துவிட்டாள் பாரதி. தான் மகேசுவரி தங்க ரத்தினத்திடம் கொடுத்துப் பதிவுத் தபாலில் மதுரைக்கு அனுப்பிய மோகினியின் கடிதம் சத்தியமூர்த்திக்குக் கிடைத்ததா இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாமல் மனம் குழம்பியிருந்தாள் அவள். அந்தக் கடிதம் அவர் கைக்குக் கிடைத்திருந்தால் மோகினியைப் பற்றிய அவருடைய சந்தேகங்கள் தீர்ந்து தம்முடைய கோபத்துக்கு மனம் வருந்தி, அவர் உடனே மோகினியைப் பார்ப்பதற்கு இங்கே வந்திருக்க வேண்டும். அவரோ வந்து இரண்டு மூன்று நாட்களாகியும் இன்றுவரை இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இந்தப் பெண்ணோ, அவரை நினைத்து நினைத்து உருகி ஒடாகப் போய்க் கொண்டிருக்கிறாள். இவளுடைய மனம் புரியாமல் ஜமீன்தாரும் கண்ணாயிரமும், பங்களாவையும், வைர நகைகளையும், பட்டுப்புடவைகளையும் இவளிடம் காண்பித்துக் கொண்டு திரிகிறார்கள். என்ன பாவம் இது? என்று நினைத்துத் தவித்துக் கொண்டிருந்தாள் பாரதி, அவளுடைய நினைப்பிலும் செயலிலும் இப்போது மோகினியின்மேல் சிறிதும் பொறாமை இல்லை. எல்லையற்ற பெருந்தன்மையோடு மோகினியையும் சத்திய மூர்த்தியையும் மதித்து அவர்களைப் போன்றவர்கள் ஒன்று சேரமுடியாத சமுதாய வாழ்வில் அவர்களை எப்படியாவது ஒன்று சேர்த்துவிட்டு அதற்காக மகிழ்வது மட்டும்ே இப்போது அவளுடைய நோக்கமாக இருந்தது. சத்தியமூர்த்தியின் பாதங்கள் இன்னும் அவளுடைய நினைவில் இருந்தன. அவற்றைப் பாவனையினால் அவளும் தொழுதாள். ஆனால் மோகினியோடு போட்டிபோட்டு அவற்றை ஆண்டு மகிழ முடியாமல் போனதற்காகக் கவலைப்படாது விட்டுக்கொடுக்கிற பெருந்தன்மை அவளுடைய குடும்பச் சொத்து. அப்பா பல சமயங்களில் பொது காரியங்களுக்காகப் பணத்தையும் செல்வாக்கையும் செலவழித்து வாழ்வில் பெருந்தன்மையாக நடந்திருக்கிறார். மகளோ இப்போது

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/655&oldid=595923" இலிருந்து மீள்விக்கப்பட்டது