பக்கம்:பொன் விலங்கு.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(52

மனித மனத்தின் எல்லையற்ற சோகத்தையோ எல்லையற்ற சந்தோஷத் தையோ அப்படி அப்படியே சொல்லிமுடிப்பதற்குப் பாஷையும் கூடப் பரிபூரணமாகத் துணை செய்வதில்லை.

மனிதனை வலுப்படுத்துகிற சக்திகளில் பிறர் அவன் மேல் செலுத்துகிற மெய்யான அன்பும் ஒன்று. பிறர் நம் மேல் அன்பும் அக்கறையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்வது எத்தனை சுகமாக இருக்கிறதோ அத்தனை வேதனையும் ஏமாற்றமும் அந்த அன்பு பொய் என்று புரிந்து கொள்ளும்போது வாழ்வில் உண்டாகிறது. சத்தியமூர்த்தி இளமையிலிருந்தே எதற்கும் எங்கும் தயங்கி நிற்காத தீரன். கீழே விழும்போதெல்லாம் அதைவிட வேகமாக மேலே எழுந்திருக்க வேண்டும் என்ற உணர்ச்சியைத் தன் வாழ்வில் பல முறை அடைந்திருக்கிறான் அவன். அவனுடைய வலது கால் முன்னால் அடியெடுத்து வைப்பதற்கு எப்போதும் தயாராயிருந்திருக்கிறது. இது இப்படித்தான் முடியும் என்று எதைப்பற்றியும் ஒரேவிதமாகச் சிந்தித்து அது அப்படி முடியாததனால் ஏமாறித் தவித்ததில்லை அவன். இப்போது மோகினியின் செய்கையால் அவன் மனம் புண்பட்டிருந்தது.

ஒன்று மட்டுமே எல்லா உறுதியையும் மீறி அவனை ஆழமாய் வருத்திக் கொண்டிருந்தது. அந்த வேதனையோடு வேதனையாக அவன் தன்னுள் நினைக்கலானான்: 'இனிமேல் என்னைப் போல் எந்த இலட்சியவாதியின் வாழ்க்கையிலும் காதல் என்ற மேகம் மூடாமல் இருக்கட்டும் அவனுடைய தீவிரமான எண்ணங்களை எல்லாம் ஏதாவது ஒரு பெண்ணின் ஞாபகம் தவிக்க செய்யாமல் இருக்கட்டும்! எந்த ஒரு பெண்ணுக்காகவும் அவனுடைய கண்களோ, இதயமோ, இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ கண்ணீர் சிந்தாமல் இருக்கட்டும்' என்று எண்ணியபோது அவன் இதயம் குமுறிக் கொண்டிருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் வேகமாகவும் சாதகமாகவும் நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/657&oldid=595925" இலிருந்து மீள்விக்கப்பட்டது