பக்கம்:பொன் விலங்கு.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 பொன் விலங்கு

மிரண்டு நெருப்பருகே நெருங்க அஞ்சுகிறவரைப் போல ஓங்கிய கையோடு பின்வாங்கித் தயங்கினார் கண்ணாயிரம். அவளைக் கைநீட்டி அடிக்காத குறையை சத்தியமூர்த்தியை வாயில் வந்தபடி திட்டித் தீர்ப்பதன் மூலம் கண்ணாயிரம் அப்போது தணித்துக் கொண்டார். 'அந்தத் தமிழ் வாத்தியார்ப் பயல் மேலிருக்கும் மயக்கத்தில்தான் நீ இப்படி ஜமீன்தாரை அலட்சியம் செய்யறே! உங்கம்மா இருக்கறப்பவே நீ ஜமீன்தாருக்குன்னுதான் உன்னை அவரிட்ட ஒப்படைக்க முடிவு செஞ்சிருந்தாள். நீயானா இன்னிக்கு இப்படித் திமிர்பிடிச்சுத் திரியறே" என்று கண்ணாயிரம் இரைந்தபோது

"அவர் தெய்வம்! தெய்வத்தைக் குறைசொல்ல மனிதர்களுக்கு யோக்யதை இல்லை. நீங்களோ மனிதர்களிலும் கேடு கெட்ட இராட்சசர்கள். உங்களுக்கு அவர் பேரைச் சொல்லக்கூடத் தகுதி கிடையாது' என்று பதிலுக்குச் சொல்லி சத்தியமூர்த்தியை அவர்கள் குறைத்துக் கூறுவதைப் பொறுக்காமல் சீறினாள் மோகினி.

'இரு? இரு சீரழியத்தான் நீ இவ்வளவும் பேசறே" என்று கறுவிக்கொண்டு போனார் கண்ணாயிரம்.

"சும்மாப் பேசி இரசாபாசம் பண்ணாதே கண்ணாயிரம்! இதோட சேர்ந்து நம்ப பூபதி மகளும் கெட்டுப்போச்சு. நம்ம மேலே ஏதோ மட்டு மருவாதி வச்சிருந்த அந்தப் பொண்ணு பாரதியும் இதுனாலே நம்ம படத்தையே துக்கி எரியிற அளவுக்கு வெறுக்குது. இந்த வீட்டிலே இருக்கிற வரை இது வழிக்கு வராது? நம்ம வீட்டுக்குப்போய்ப் படுத்தற விதமாப் படுத்தினா வழிக்கு வரும். சும்மா மயிலே மயிலேன்னா இறகு போடாது. பேசாமே வா... அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஒத்துப் பாடினார் ஜமீன்தார். அவர்கள் போனதும் மறுபடியும் கதவைத் தாழிட்டுக்கொண்டு ஆற்றாமையோடு குமுறிக் குமுறி அழுதாள் மோகினி. அப்படி அழுதபோது, "இந்தக் கைகள் உன் கண்ணிரைத் துடைப்பதற்கு எப்போதும் தயாராயிருக்கும்" என்று முன்பு ஒரு சமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/664&oldid=595933" இலிருந்து மீள்விக்கப்பட்டது