பக்கம்:பொன் விலங்கு.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 பொன் விலங்கு

ஏற்கெனவே நலிந்து தளர்ந்திருந்த அவள் மனம் இன்னும் தளர்ந்து நம்பிக்கை வீழ்ந்து விட்டதென்றும் பாரதி அறிந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. பாரதி எந்தப் பிரிவுபசாரக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பிவந்திருந்தாளோ அந்தப் பிரிவுபசாரக் கூட்டத்தில் வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் சத்தியமூர்த்தி மேற்கு ஜெர்மனிக்குப் பயணமாவதைப் பாராட்டிவிடைகொடுத்து அனுப்பும் பாராட்டிதழ்களின் அச்சுப் பிரதிகள் சிலவற்றைக் கூட்டத்தில் வழங்கியதால் பாரதியும் கையோடு காரில் அவற்றைக் கொணர்ந்திருந்தாள். -

அவள் வீட்டுக்குள் வரும்போது அவற்றை மறந்து காரிலேயே விட்டு வந்ததனால் டிரைவர் முத்தையா அவற்றை உள்ளே கொண்டு வந்து அவளுடைய மேஜையில் வைத்துவிட்டுப் போயிருந்தான். இரவில் மேஜை மீதிருந்த தண்ணீர்க் கூஜாவிலிருந்து தாகத்துக்காக நீர் பருக வந்தபோது பாரதி அறியாமலே தற்செயலாகத் தான் அதைப் பார்க்க நேர்ந்தபோது மோகினி பரபரப்படைந்தாள். உடனே அதைப் படித்தும் விட்டாள். என்றாவது ஒரு நாள் இந்தக் கூண்டிலிருந்து விடுபட்டுப்போய் அவருடைய பாதங்களின் நிழலில் வாழலாம் என்றெண்ணியிருந்த நம்பிக்கையும் அவள் மனத்தில் இப்போது சரிந்தது. அவள் படித்த பாராட்டிதழ்களில் ஒன்றில், "இன்று நீங்கள் எங்களிடமிருந்தும் இந்தக் கல்லூரி ஆசிரியப் பதவியிலிருந்தும் வெகு தொலைவு விலகிப் போகிறீர்கள். மாணவர்கள் பலரைக் கண்கலங்கச் செய்யும் இந்த நிகழ்ச்சியை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம், உங்களுடைய எதிர்காலம் நாட்டுக்குப் பயன்படுமென்ற நல்லெண்ணத்தால், நாங்கள் எங்களுடைய நஷ்டத்தை மறந்து விடுகிறோம்...' என்று எழுதியிருந்தது. 'தன்னுடைய நஷ்டத்தை எப்படி மறப்பது?' என்றெண்ணி உறக்கமிழந்த உணர்வில் ஊக்கமிழந்து நிம்மதியாகப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் பாரதியைப் பார்த்தாள் மோகினி. சிறிது நேரம் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. பொதுவாக ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தாள் போல் கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவள் ੰ பெருமூச்சு விட்டபடி பக்கத்திலிருந்த அறையில் நுழைந்தாள். வாழ்க்கையில் நான் தனி இந்தப் பரந்த உலகத்தில் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை. யாராவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/668&oldid=595937" இலிருந்து மீள்விக்கப்பட்டது