பக்கம்:பொன் விலங்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 65

மட்டும் தூங்குவதுபோல் சும்மா மூடியிருந்தன. கீழே இருந்து பரவும் நறுமணங்கள் அவற்றைச் சுமந்து கொண்டிருப்பவளின் சோகமான வேதனைகளை அவனுடைய ஞாபகத்தில் படரச் செய்தன. அவன் ஏதேதோ தொடர்பு உள்ளனவும், தொடர்பு அற்றனவுமாகிய சிந்தனைகளைத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கினான்.

அதிகாலை மூன்றரை மணி இருக்கும். இரயில் மதுரைப் பாலம் நிலையத்தைக் கடந்து வைகைப் பாலத்தில் தடதட வென்று ஓசையிட்டு ஒடத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் தன்னுடைய உணர்ச்சியின் மானத்தை இரண்டாம் முறையாக அவனுக்கு நிரூபிக்கும் காரியத்தைச் செய்யலானாள். அவளுடைய கைவளைகள் ஓசைப்பட்டுக் கண்ணை மூடிக் கொண்டிருந்த அவனை எழுப்பி விட்டன. கண்களைத் திறந்து விழித்ததும் இரவில் கதவைத் திறந்து கொண்டு வைகையில் பாய்ந்து விடத் துணியும் நிலையில் அவளைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. பார்த்ததும் திடுக்கிட்டான். அவள் நினைத்ததைச் செய்துவிட அந்த நிலையில் அவளுக்கு அரைக்கணமே போதும். மேல் பலகையிலிருந்து கீழே குதித்துத் தாவி அவளைக் காப்பாற்றவோ குறைந்த பட்சம் அவனுக்கு இரண்டு கணமாவது வேண்டுமே?

米 உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காண முடியாமல் மறைத்துவிடுகிறது.

米 'அந்த நிலையில் தான் என்ன செய்வது? என்பதை சத்திய மூர்த்தி இன்னும் ஒருகணம் சிந்தித்திருந்தானானால் அவள் வைகையாற்றில் பாய்ந்திருப்பாள். சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருப் பதைவிடச் செயல்பட்டுக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தையும்,

பொ. வி - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/67&oldid=595939" இலிருந்து மீள்விக்கப்பட்டது