பக்கம்:பொன் விலங்கு.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 - பொன் விலங்கு

விட்டாள் பாரதி. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டுவிட்டு சத்தியமூர்த்தி வெளிநாடு செல்லப் போகிறார் என்பதையும், அதற்காகத்தான் அன்று மாலையில் லேக்வியூ ஹோட்டலில் பிரிவுபசார விருந்து நடந்தது என்பதையும், எதற்காகப் பாரதி தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்பது புரியாமல் மோகினியின் மனம் குழம்பியது.

63

k

...துக்கமும் ஒரு தற்காலிகமான சாவு தான். அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது. அதேபோல் சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம்தான். ஆனால் அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிவதில்லை...

பாரதி மறைத்திருந்தாலும் சத்திய மூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டுவிட்டு மேற்கு ஜெர்மனிக்குச் செல்லப் போகிறார் என்று இப்போது தெரிந்து விட்டது. பாரதி அந்த விவரத்தைத் தன்னிடம் மறைத்ததற்காக மோகினி சிறிதும் கவலைப்படவில்லை. வாழ்வில் எதற்காகவுமே கவலைப்பட்டுப் பயனில்லை என்பதுபோல் விரக்தியடைந்து விட்டபின் கவலைப்படுவது கூட அதற்குக் காரணமான துயரத்தின் கெளரவத்தைக் குறைத்து விடுகிறதே எல்லாத் துயரங்களையும்நம்மைத் தேடி வருகிற மலை மலையான எல்லாத் துன்பங்களையும்-நமக்கே சொந்தமாக ஏற்று அங்கீகரித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும்போதுதான் அந்தத் துயரத்துக்கு நாம் செய்கிற கெளரவம் மெய்யாகிறது என்று அந்த நிலையில் எதையும் தாங்கிக் கொள்ள முடிந்து ஒரு நிதானமும் மனப்பக்குவம் அவளுக்கு வந்திருந்தன. என்ன் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் அக்கா என்று கேட்டபாரதியிடம் தான் சொல்வது பொய்தான் என்ற உணர்வுடனே சிறிதும் மனம் குழம்பாமல், 'ஏதோ பழையப்பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/670&oldid=595940" இலிருந்து மீள்விக்கப்பட்டது