பக்கம்:பொன் விலங்கு.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - 669

எழுதுகிறேன்' என்று பதில் சொல்லிச் சமாளித்தபோதும், நள்ளிரவுக்கு மேலாகி விட்ட அந்த நேரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு பேய் போல் எழுதிக் கொண்டிருந்த போதும் அதே நிதானத்தோடுதான் அவள் நடந்து கொண்டிருந்தாள். பார்க்கப்போனால் எது பேய்? எது மனிதன்? பேய்க்கும் மனிதனுக்கும் உயிரும் உணர்வும்தானே வேறுபாடுகள்? வாழ்க்கையிலேயே பேய் பிசாசுகளைவிடக் கொடிய மனிதர்கள் தன்னைச் சூழ்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும்போது உருவமில்லாத வெறும் பேய் பிசாசுகள் இவர்களை விடக் கெட்டவர்களாக இருக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. - -

அப்போது அவளைச் சுற்றிலும் ஒரே இருள். நடுவே மேஜை விளக்கு மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலையில், அவள் எதைச் செய்து கொண்டிருந்தாளோ அதுவே சொப்பனம் போல் இருந்தது. வாழ்வதையும் நினைப்பதையும் விடச் சொப்பனம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது வருகிற அது பிரத்தியட்ச வாழ்வின் துக்கங்களில்லாமல் சுகமாயிருக்கிறது. தோட்டத்துப் பக்கமிருந்து வீசிய குளிர்ந்த காற்றில் பன்னீர்ப் பூவின் மணமும், பவழமல்லிகை மணமும், கமகமத்தன. எங்கோ மரப் பொந்தில் ஆந்தை ஒருமுறை அலறியது. அப்போது சுவர்க் கடிகாரம் இரண்டு மணி அடித்தது. அந்த வேளையில் அவளுடைய மனத்தைப்போல் உலகமும் உணர்வும் செத்துப் போய்த் தூங்கிக் கொண்டிருந்தது. துக்கமும் ஒரு தற்காலிகமான சாவுதான்! ஆனால் அதிலிருந்து விழித்துக்கொள்ள முடிகிறது. சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம்தான்! ஆனால் அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிவதில்லை. தான் எழுதிய கடிதங்களைத் தனித்தனியே மடித்து இரண்டு உறைகளில் இட்டு மேஜை மேல் வைத்தபின் ஒரு நோக்கமும் இல்லாமல் வெளியே பலகணி வழியே பார்த்தாள் மோகினி, எதிர்ப்புறம் நிலவும் மழை இருளும் கலந்து மயங்கிய மாலையில் எங்கோ குங்குமமிட்டதுபோல் தீ எரிந்து கொண்டிருந்தது. பின்னிரவு குளிரக் குளிரப் பவழமல்லிகைப்பூக்களின் வாசனை அறைக்குள் அதிகமாக வந்து பரவியது. காலந்தப்பிய மிக முன்னாலேயே இந்தச் சோம்பேறி உலகத்தை எழுப்பிவிட ஆசைப்பட அவசரக்காரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/671&oldid=595941" இலிருந்து மீள்விக்கப்பட்டது