பக்கம்:பொன் விலங்கு.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 673

அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு சத்தியமூர்த்தி சாரைப் போய்ப் பார்த்துப் பேசிவர எண்ணியிருந்த பாரதி கடிகாரத்தில் காலை ஐந்தே முக்கால் மணிக்கு அலாரம் வைத்திருந்தாள். அலாரம் மணி அடித்ததைக்கேட்டதும் பாரதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தாள். நேரங் கழித்து எழுந்திருந்துவிட்டது போன்ற பரபரப்போடு அவள் மின் விளக்கைப் போட்டபோது, சுழித்துச் சுழித்து வீசும் குளிர்ந்த காற்று ஜன்னல் கதவுகளில் மோதியடித்துக் கொண்டிருந்தது. மழை வரும் போல் மலைகளிலும் சுற்றுப்புறத்திலும் இருண்டு மேகங்கள் கப்பியிருந்தன. விடிகிற நேரமாகியும் இருட்டு மூட்டம் போட்டிருந்தது. விளக்கைப் போட்டுத் திரும்பியவள் எதிரே பார்த்ததும் திகைத்தாள். மோகினி மேஜையருகே சோபாவில் உட்கார்ந்து சாய்ந்தபடியே துங்கிக் கொண்டிருந்தாள். -

அவளுடைய தோற்றத்திலிருந்த பொலிவையும்புதுமையையும் பார்த்தால் விடியுமுன் அதிகாலையிலேயே எழுந்து நீராடி உடைமாற்றித் திலகமிட்டு அலங்கரித்துக் கொண்டு உட்கார்ந்தவள் தற்செயலாக அப்படியே சோர்ந்து தூங்கி விட்டாற் போலிருந்தது. ஜன்னல் வழியாக வீசிய மலைக் காற்றில் தோட்டத்து மரத்திலிருந்து உதிர்ந்த பவழ மல்லிகைப் பூக்கள் மோகினியின் மடியிலும் கால்களிலுமாகத் தாறுமாறாய் நிறைய வந்து விழுந்திருந்தன. காற்றுப் புகுந்து அசைத்து ஆட்டிய கருங்கூந்தல் அலை அலையாகச் சுருண்டு சிலிர்த்துத் துங்கிக் கொண்டிருக்கும் அவள் முகத்தை என்றுமில்லாத பேரழகோடு காண்பித்துக் கொண்டிருந்தது. பொன்நிறச் சரிகைக்கரையிட்ட வெண்பட்டுப் புடவையணிந்திருந்ததனால் அவளே அப்போது, கலைமகள் போலிருந்தாள். - -

அந்த நடனராணி சும்மா தூங்குவதே ஒரு சாமர்த்தியமான அபிநயம் போலிருப்பதைப் பார்த்து வியந்துகொண்டே, "பாவம் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். காப்பியோடு போய் எழுப்பலாம்..." என்று நினைத்துக் கொண்ட்வளாய்ப் பல்விளக்கப் போனாள் பாரதி. பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் சுடச்சுட ஆவிபறக்கும் காப்பியோடு பாரதி, மோகினியை எழுப்ப வந்தாள். "என்னக்கா இது? விடிந்ததும் விடியாததுமாக எழுந்து குளித்துவிட்டு

பொ.வி -43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/675&oldid=595945" இலிருந்து மீள்விக்கப்பட்டது