பக்கம்:பொன் விலங்கு.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 பொன் விலங்கு

இப்படி உட்கார்ந்தபடி தூங்குகிறீர்களே...? காப்பி கொண்டு வந்திருக்கிறேன்' என்று பாரதி குரல் கொடுத்துவிட்டுக் காப்பி டபராவை மேஜையில் வைத்தாள். மோகினிக்கு நல்லதுக்கமாயிருக்க வேண்டும் என்று நினைத்து அவளைத் தொட்டு எழுப்புவதற்காகத் தோள் மேல் கைவைத்த பாரதி பூமாலை நழுவுவதுபோல் மோகினியின் தலை சாய்ந்து உடல் சரியவே அடித் தொண்டையிலிருந்து பீறிடும் அழுகை வீடே அதிரும்படி பெரிய அலறலாக வெளிப்பட 'அக்கா மோசம் பண்ணிட்டுப் போயிட்டீங்களே' என்று பெரிதாகக் கதறினாள். மோகினி உடுத்தியிருந்த புடவையின் சரிகைக்கரை சற்றே விலகியிருந்த வலது பாதத்தில் அவள் சலங்கை கட்டியிருப்பது தெரிந்தது. காலடியில் தூக்கமருந்து மாத்திரைப் பாட்டில் விழுந்து உடைந்திருந்தது. மேஜை மேல் கடித உறைகள் இரண்டு கிடந்தன. ஒன்றில் பாரதியின் பெயர் இருந்தது. பாரதிக்குக் கடிதம் வைத்திருந்த உறையின் மேல், என் அருமைச் சகோதரி - தங்கை பாரதிக்கு என்று முகவரி எழுதியிருந்தாள் மோகினி. சத்தியமூர்த்திக்கு எழுதியிருந்த கடித உறையில், "என்னைக் காப்பாற்றி ஆட்கொண்ட தெய்வம் உயர்திரு. சத்தியமூர்த்தி அவர்களுக்கு என்று எழுதியிருந்தாள். பாரதிக்கு எழுதிய கடிதத்தில், "அருமைச் சகோதரி என்னை மன்னித்துவிடு! ஏதோ ஒரு பிறவியில் நீயும் நானும் உடன் பிறந்தவர்களாக இருந்து, விட்டகுறை தொட்ட குறையோ என்னவோ, நீ என்மேல் அளவற்ற அன்பும் பாசமும் காண்பித்தாய். என்னால் இனி உனக்கும் துன்பங்கள் வரலாம். நான் வாழ்வதற்கு விரும்பவில்லை என்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நான் தூங்கப் போகிறேன், மனிதர்களின் இந்த உலகத்தை மறந்து நிம்மதியாகத்துங்கப் போகிறேன். இன்றிரவு மட்டும் நிம்மதியாகத் தூங்குவதற்கு இரண்டு தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளுங்களக்கா? என்று நீ சொல்லியிருந்தாய் பாரதி நானோ அடுத்த பிறவி வரை நிம்மதியாகத் துங்க விரும்பும் பேராசையால் நிறைந்த பெருந்துக்கத்துக்கு ஆசைப்பட்டுப் பாட்டிலிலிருந்த அவ்வளவு மாத்திரைகளையும் விழுங்கியிருக்கிறேன். மறுபடி இனி அடுத்த பிறவியில் விழித்தால் போதும். சொல்லப்போனால் இன்னொரு முறை இந்த உலகில் பிறந்து இதில் நிறைந்துள்ள துரோகங்களையும் வஞ்சகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போதே எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/676&oldid=595946" இலிருந்து மீள்விக்கப்பட்டது