பக்கம்:பொன் விலங்கு.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 பொன் விலங்கு

அவருக்கு நினைவூட்டி எல்லா விவரமும் எழுதியிருக்கிறேன். நீ அவரிடம் இந்தக் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுத்துவிடு! அப்புறம் அவர் செய்வதைச் செய்யட்டும். மறுபடி விழித்துக்கொள்ள முடியாத பேருறக்கத்தில் ஆழ்வதற்காக இப்போது எனக்கு இந்த உலகத்திலிருந்து விடைகொடு. உன் அக்கா மோகினி."

பாரதி இந்தக் கடிதத்தைப் படித்துவிட்டுக் குழந்தை போல் மேலும் மேலும் விசும்பி விசும்பி அழுதாள். அவள் சற்றுமுன் பெரிதாகஅலறியழுதகுரலைக்கேட்டு ஜமீன்தாரும், கண்ணாயிரமும், முன்புறம் போர்டிகோவில் காரைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் முத்தையாவும் பதறிப் போய்ப் பரபரப்படைந்து ஓடிவந்தார்கள். மோகினி 'சத்தியமூர்த்திக்காக எழுதி வைத்திருந்த கடிதத்தை ஜமீன்தாரும் கண்ணாயிரமும் பார்த்துவிடாமல் பத்திரமாக எடுத்து மறைத்து வைத்துக் கொண்டாள் பாரதி. எவ்வளவு பெரிய சோகத்தின் போதும் ஜமீன்தாருக்கு அழுகை வராது. அவ்வளவு குரூரமும், கல்மனமும் அவருக்கு உண்டு. மைனர்ப் பருவத்தில் ஜமீன் எல்லைக்குள்ளிருந்த எத்தனையோ ஏழை எளிய பெண்களிடம் தவறாக நடந்துகொண்டு-அவர்கள் வெளியில் போய்த் தன்னைக் குறைத்துப் பேசுமளவுக்கு தைரியம் வந்ததாகத் தெரிந்தால் ஆட்களை விட்டுக் குருத்து வயதிலேயே கொலை செய்யவும் ஏற்பாடு செய்து பழக்கமிருந்ததாகப் பேசிக்கொள்வார்கள் அவரைப்பற்றி. கண்ணாயிரமும்பெரிய கிராதகன்.மோகினியைக் கருவியாக வைத்து இந்த ஜமீன்தாருடன் இன்னும் உறவாடிப் பணம் பண்ணலாமென்ற திட்டத்தில் மண் போட்டுவிட்டு அவள் போய் விட்டாளே என்பதுதான் அவனுக்கு இப்போது வருத்தமாக இருந்ததே ஒழியப் பச்சைக் கிளிபோல் பரிசுத்தவதியான அந்த அழகி மாண்டுபோய்விட்டதுயரம் அவனுக்கும் நிஜமாக இல்லை. கொடிய மிருகங்களைப் பார்ப்பது போல் அவர்களைக் கடுமையாகப் பார்த்தாள் பாரதி. டிரைவர் முத்தையாவும், சமையல்காரரும், வீடு பெருக்கும் வேலைக்காரி ஒருத்தியும் கண்கலங்கி நின்றார்கள். வாழ்வின் தொடக்கத்திலிருந்தே குரூரமாகவும் கொடுமையாகவும் வாழ்ந்து வாழ்ந்து மென்மையான உணர்வுகளெல்லாம் மரத்துப் போய்விட்ட ஜமீன்தாரும், கண்ணாயிரமும் பேயறைபட்டதுபோல் திகைத்து நின்றார்களே ஒழியக் கண்ணிர் விட்டு அழவில்லை. எல்லாரையும் ஒதுங்கிப் போகச் சொல்லிவிட்டு வேலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/678&oldid=595948" இலிருந்து மீள்விக்கப்பட்டது