பக்கம்:பொன் விலங்கு.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 677

காரியுடைய உதவியோடு மோகினியின் உடலைத் தரையில் எடுத்துவிட்டாள் பாரதி. வெளியே காற்றும் மழையுமாகப் பலமான சாரல் பிடித்திருந்தது. பிணத்தின் தலைமாட்டில் விளக்கேற்றி ஊதுவத்தி கொளுத்தி வைத்துவிட்டுச் சுகமாக அநுபவித்து தூங்குவதுபோல் அழகாயிருந்த மோகினியின் தோற்றத்தைப் பார்த்து மறுபடியும் குமுறிக் குமுறி அழுதாள் பாரதி. இறுதியில் ஒருவாறு தன் மனத்தைத் தேற்றிக்கொண்டு மோகினியின் கடைசி விருப்பப்படி அந்தக் கடிதத்தைச்த்தியமூர்த்தியிடம் கொடுப்பதற்காக அவள் புறப்பட்டாள். - -

ஆனால், என்ன துரதிர்ஷ்டம்? சாவுக்குப் பிறகும் மோகினியின் துரதிர்ஷ்டம் அவளுடைய கடிதத்துக்குக்கூட இருந்தது. எதிர்பாராதவிதமாகக் காலையில் முதல் பஸ்ஸுக்கே புறப்பட்டு மதுரைக்குப் போயிருந்தான் சத்தியமூர்த்தி, சாவுக்குப் பின்பும் அவளைத் துர்ப்பாக்கியசாலியாக்கி அவளுடைய வேண்டுகோள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற நிலையை ஏற்படுத்தாமல் கடிதத்தை டிரைவர் முத்தையாவிடம் கொடுத்து உடனே காரிலேயே மதுரைக்குப் போய் சத்தியமூர்த்தியை அழைத்து வர ஏற்பாடு செய்தாள் பாரதி. கார் மதுரைக்குப் போய்த் திரும்பும்வரை அவளால் அங்கு நடைபெற்ற ஏற்பாடுகள் எதையும் தடுக்க முடியவில்லை. சத்தியமூர்த்தி வருகிற வரை மோகினியின் பிணத்தை எடுக்கலாகாதென்றுகூட அவளால் வெளிப்படையாக அவர்களைத் தடுக்க முடியவில்லை. - . . . ."

மாலை ஆறு மணிக்கெல்லாம் பூச்சரங்களால் அலங்கரித்த பல்லக்கில் மோகினியின் பிரேதத்தை வைத்து எடுத்துக் கொண்டு மயானத்துக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக ஜமீன்தார் இரண்டாயிரம் ரூபாய்க்கு முழு ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றி வீட்டிலிருந்து மயானம் வரை வீதியின் இருபுறமும் காசுகளை வீசி எறியச் செய்தார். மழை துறிக் கொண்டிருந்ததனால் மயானத்தில் மேற்புறம் தகரக் கூரையிட்ட ஓரிடத்தில் சிதை அடுக்கப்பட்டது. தம்முடைய பேர் கெளரவம் இதையெல்லாம் காப்பாற்றிக் கொள்வதற்காக அது தற்கொலை என்று தெரியாதபடி வெறும் இயல்பான மரணம் என்பது போல் மட்டுமே பத்திரிகைகளிலே செய்தி வர மிகவும் கவனமாக ஏற்பாடு செய்திருந்தார் ஜமீன்தார். - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/679&oldid=595949" இலிருந்து மீள்விக்கப்பட்டது