பக்கம்:பொன் விலங்கு.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 6.79

பச்சைப் புள்ளே கணக்காக் குமுறிக்குமுறி அழுதாரு சமாசாரத்தை அறிஞ்சிக்கிட்டதும் ரொம்ப மனசு உடைஞ்சிப் போயிட்டாரு..." என்று டிரைவர் கூறியபோது, சத்தியமூர்த்தி மயானத்திலிருந்து இந்த மழைச் சாரலில் எப்படி ஊருக்குள் திரும்பி வருவார்? அவசரப்பட்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டாரே?' என்ற சந்தேகம் வரவே தானே அந்தக் காரை ஓட்டிக் கொண்டு திரும்பவும் மயானத்துக்குப் புறப்பட்டாள்.

எல்லையற்ற கருமையாய் மேகங்கள் அடர்ந்து எங்கும் கனத்துக் கிடந்த மையிருட்டினிடையே அவளுடைய பிணம் எரிகின்ற அந்த சிதையைத் தேடிச்சென்று மதுரையிலிருந்தே வாங்கி வந்திருந்த மல்லிகைப்பூ மாலையையும், மஞ்சள் கிழங்கையும், குங்குமத்தையும் அந்த நெருப்பில் இட்ட பின் மெளனமாகக் கண்ணீர் சிந்தியபடியே நின்றான் சத்தியமூர்த்தி. அந்தச் சிதையிலிருந்து பிதிர்ந்த நெருப்புத் துண்டுகள் இரண்டு அவனுடைய கால்களை முத்தமிடுவதுபோல் வந்து வீழ்ந்து அங்கே சுட்டன. தன்னைப் பொறுத்தவரை உலகத்தின் சந்தோஷமயமான விநாடிகள்-சந்தர்ப்பங்கள் எல்லாம் அன்று அங்கே முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது அவனுக்கு. பார்க்கப் போனால் வாழ்க்கையே ஒரு சபலம்தான். சிலருக்கு அது நிறைவேறுகிறது. பலருக்கு நிறைவேறுவதில்லை. அது நிறைவேறுவதில்லை என்று உணரும்போது மனப்பக்குவமில்லாதவர்களுக்கு உலகின் மேலேயே கோபமும், வெறுப்பும், நிராசையும் வருகின்றன. சத்தியமூர்த்தி மனம் பக்குவமில்லாதவனில்லை. வாழ்க்கையில் அவன் நிறையத் துக்கப்பட்டு விட்டான். ஆனால் மற்றவர்களுடைய சந்தோஷத்துக்காக இன்னும் அவன் எத்தனையோபெரும் பணிகளைப் புரிந்து நெடுநாள் வாழ வேண்டும். -

மயானத்தில் அந்த வேளையில் பின்னால் யாரோ வந்து நிற்கிற காலடியோசை கேட்டு அவன் திரும்பினான். பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். மெல்ல விசும்பி அழுதுகொண்டே, "அக்கா தெய்வப்பிறவி உங்களுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/681&oldid=595952" இலிருந்து மீள்விக்கப்பட்டது