பக்கம்:பொன் விலங்கு.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 685

குடும்பத்துக்காகவும் சாதிக்க முடியலாம். ஆனால் அந்த எல்லாச் சாதனைகளுக்காகவும் அவன் தானே பெருமிதப்பட்டுப் புன்முறுவல் பூக்கும் ஒவ்வொரு விநாடியும் உள்ளே யாருடைய ஞாபகமோ வந்து அவனை அழவைக்கும். மோகினியும் இந்த அநுதாப ஞாபகத்தைத்தான் அவனிடம் விரும்பினாள். அவனுடைய மனம் அவளுடைய கோயில், அவளுக்கு மட்டுமே சொந்தமான கோயில். மறுபடி அவள் எப்போதாவது எந்தப் பிறவியிலாவது சந்திக்கிறவரை கண்ணிராலும் அமைதியாலும் அவன் மனம் அவளை அந்தரங்கமாக உபசரித்துக் கொண்டே இருக்கும். உணர்ச்சிகரமான அந்த உச்சரிப்பை இன்னும் அதிகமாக விளக்கிச்சொல்ல முடியாததற்காகவாசகர்கள் மன்னிக்க வேண்டும். ஏனென்றால், சொல்லுக்கும், நினைப்புக்கும் எந்த இடத்தில் பொருள் முடிகிறதோ அங்கேதான் உணர்ச்சி பிறக்கிறது. அந்த உணர்ச்சியைச் சொல்வதற்கு சரியான பாஷை எதுவும் இல்லை. பல சமயங்களில் உணர்ச்சிக்குப் பாஷை கருவியாக இருந்து ஒத்துழைப்பதுமில்லை.

நிறைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/687&oldid=595958" இலிருந்து மீள்விக்கப்பட்டது