பக்கம்:பொன் விலங்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 71

பிரமுகராக வாழ்வதற்கு இந்த இரண்டு வசதிகளைவிடவேறு என்ன வேண்டும்? ஆகவே அவர் சகலவிதமான ஆதரவும் உள்ள நகரப் பிரமுகர்களில் ஒருவராக இருந்தார்.

“என்னப்பா, திருட்டு விழி விழிக்கிறாய்? என்னிடம் பதில் சொல்வதற்கு என்ன கூச்சம்? சும்மா... சொல் அப்பனே..?" என்று மீண்டும் கண்ணாயிரம் சத்தியமூர்த்தியை மடக்கிக் கேள்வி கேட்கவே அவன் ஆத்திரமடைந்த்ான்.

"திருவாளர் கண்ணாயிரம் அவர்களே இரயில்வேக்காரர்கள் இந்த இரயிலை நான் பயணம் செய்வதற்காக மட்டும் விட்டிருந்தால் என்னோடு கூட யாரும் ஏறிக்கொண்டு வரவிடாமல் நானே தடுத்திருப்பேன். அது முடியாமல் போனதற்காகத் தயை கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள்..." என்று சொல்லிவிட்டுக் கண்ணா யிரத்தைக் கடந்து வேகமாக விலகி முன்னால் நடந்தான் சத்தியமூர்த்தி.

'கோபித்துக் கொள்ளாதே. அப்பனே! நாட்டியக்காரி மோகினியை உனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அதனால்தான் கேட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார் கண்ணாயிரம். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி முடிப்பதற்குள் சத்தியமூர்த்தி முன்னால் சிறிது தொலைவு நடந்துபோயிருந்தாலும் நாட்டியக்காரி மோகினி' என்ற சொற்கள் அவனுக்குத் தெளிவாகக் கேட்டிருந்தன. அந்தப் பெயர் அவனால் காப்பாற்றப்பட்டவளுடையதாயிருந்தால் அதைவிடப்பொருத்தமான வேறு பெயரை அவளுக்கு வைத்திருக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு. உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காணமுடியாமல் மறைத்துவிடுகிறது. ஒரு சீராய் முத்துக்கோவைப்போல் மின்னிய அந்தக் கட்டழகுப் பல் வரிசையையும் சிரிப்பையும் ஞாபகத்தில் கொண்டு வர முயன்று தோற்றான் சத்தியமூர்த்தி. தாங்கள் எந்தக் கலைகளை நம்பி வாழமுடியுமோ, அந்தக் கலைகளாலும் முழுமையாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/73&oldid=595967" இலிருந்து மீள்விக்கப்பட்டது