பக்கம்:பொன் விலங்கு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பொன் விலங்கு

காப்பாற்றப்படாமல் மனிதர்களாலும் தூய்மையாகக் காப்பாற்றப்படாமல் இரண்டுங்கெட்ட நிலைக்கு வந்துவிட்ட இத்தகைய கலைக் குடும்பங்களைப் எந்தக் காலத்திலும் நிச்சயமான தீர்மானத்துடன் பரிகாரம் காண முடியாதபடி சில பிரச்சினைகள் இந்த நாட்டில் நிரந்தரமாகவே அரைகுறையாய் இருந்துவருவதை அவனால் உணர முடிந்தது.

இரயில் நிலையத்துக்கு வெளியே வந்ததும் வலது பக்கம் ஒரமாக நிறுத்தியிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். விடிவதற்கு இன்னும் சில நாழிகை நேரமே இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மதுரையின் வீதிகளில் நடப்பதே ஓர் இன்பகரமான அநுபவமாயிருக்கும். ரிக்ஷாக்காரர்களிடமிருந்து விடுபட்டு சூட்கேஸும் கையுமாக நடந்தான்.அவன். பயனை எதிர்பாராமல் பழைய காலத்து மனிதர்கள் செய்து வைத்துவிட்டுப் போகும் பல தருமங்களுக்கு ஒரு ஞாபகம்போல் எதிரே மங்கம்மாள் சத்திரம் தெரிந்தது. தருமம், தானம் போன்ற பல பெரிய காரியங்கள் இந்த நூற்றாண்டில் ஒரு நல்ல ஞாபகம் என்ற அளவிலாவது நிலைத்திருக்கின்றன என்று எண்ணியபோது அந்த எண்ணத்தை அடுத்து கண்ணாயிரம் சேர்ந்து ஞாபகத்துக்கு வரவே சத்தியமூர்த்தி தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். வீடு நெருங்க நெருங்கத் தன்னை எதிர்கொள்ளப்போகிற தந்தைக்குத் தான் சொல்லியாக வேண்டிய மறுமொழியைப் பற்றிச் சிந்திக்கலானான் அவன்.

வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்புகிறேன். வீட்டில் இரண்டு தங்கைகளும், வயதான பெற்றோரும் இருக்கிறார்களே, அவர்களுக்காக நான் என்ன வாங்கிக்கொண்டு போகிறேன்? என்று எண்ணியபோதுதான் வெறும் கையோடு ஊர் திரும்புவதை அவன் தானாகவே உணர்ந்துவருந்த வேண்டியிருந்தது. எப்போதுமே அவன் அப்படித்தான் அநுபவபூர்வமாக உலகத்துக்கேற்ப வாழும் சில பழக்கங்கள் அவனிடம் படியாமலே போய்விட்டது. அப்பாவும் அம்மாவும் பல முறை அவனிடமுள்ள இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கல்லூரி நாட்களில் அவன் விடுமுறைக்கு ஊர் திரும்பும்போது, "ஊரிலிருந்து வீடுதேடி வருகிறவனுக்கு ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/74&oldid=595968" இலிருந்து மீள்விக்கப்பட்டது