பக்கம்:பொன் விலங்கு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 77

அப்பா இப்படி ஆத்திரப்பட்டுப் பேசியதையும் சத்தியமூர்த்தி பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். நினைப்புகளாலும், பாவனைகளாலும் ஒரு தலைமுறைக்கு முந்திய மனப்பான்மை கொண்டவர் அவர். அவரிடம் எதிர்த்துப் பேச விரும்பவில்லை அவன். பதில் பேசாமல் பல் விளக்கி முகம் கழுவிக்கொண்டு வருவதற்காகப் பின்பக்கம் எழுந்து சென்றான். அவனுடன் கூடவே பின்புறம் நடந்து வந்த தங்கை ஆண்டாள், "அப்பா பேசியதை ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே அண்ணா. ஏதோ கவலையில் ஆத்திரமாகச் சொல்லிவிட்டார்...' என்று ஆறுதலாகக் கூறிய வார்த்தைகளுக்கும் அவன் மறுமொழி கூறவில்லை; அப்போது தன் மேலேயே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.

முகம் கழுவிக்கொண்டு வாசல் பக்கம் வந்தால் மாடியில் குடியிருக்கிற பத்திரிகை நிருபர் பரமசிவம் கீழே இறங்கி வருகிறபோது எதிர்ப்பட்டார்.

'என்ன மிஸ்டர் சத்தியமூர்த்தி? மல்லிகைப் பந்தலில் 'இண்டர்வ்யூ என்ன ஆயிற்று? முதல் வகுப்பில் தேறியிருக்கிறீர்கள். போட்டி ஒன்றும் இருக்காது. தானே கிடைத்து விடும்..." என்று அதே பரமசிவமும் பேச்சை ஆரம்பித்தார். எந்தப் பேச்சை எதிராளி நம்மிடம் பேசாமலிருந்தால் மனம் நிம்மதியாயிருக்குமென்று சில சமயங்களில் நமக்குத் தோன்றுகிறதோ அந்தப் பேச்சைத்தான் அந்தச் சமயங்களில் திரும்பத் திரும்ப நாம் கேட்கும்படி நேரிடுவது வழக்கம். ஒரு மனிதனுடைய பிரச்சினைகளை சுகமோ துக்கமோ அவனைச் சுற்றியிருக்கிற எல்லாரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கவனித்துக் கொண்டிருப்பதையும் அதன் விளைவு களையும் அதற்கு ஆளானவனே வெறுப்போடு பார்க்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது மற்றவர்கள் அதை மறுப்பதில்லை. -

அப்போது மற்றவர்களின் கேள்வியே அழையா விருந்தாக வாய்த்துத் தொல்லைத் தருவதுண்டு. இதை நினைக்கும்போது மனத்துக்குள் சிரிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. நினைப்புகளில் அந்தரங்கமாக இருப்பவற்றைத் தவிர வேறு எவற்றாலும் மனிதன்இரகசியமாக வாழ முடியாது போலிருக்கிறதே என்று நினைத்தபோது பரமசிவத்துக்கும், பரமசிவத்தைத் தவிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/79&oldid=595973" இலிருந்து மீள்விக்கப்பட்டது