பக்கம்:பொன் விலங்கு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பொன் விலங்கு இன்னும் தன்னை எதிரே பார்த்து மல்லிகைப் பந்தல் இண்டர்வ் பூவைப் பற்றித் தன்னிடம் விசாரிக்கப் போகிற ஒவ்வொருவருக்கும் தான் எதற்காகவோ பயந்து வாழவேண்டும் போல் பிரமையா யிருந்தது அவனுக்கு

ஏதோ பதில் பேசிப் பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள்ளே போவதற்காகத் திரும்பியவன், "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று கீழே தெருவிலிருந்து அட்டகாசமாக ஒலித்த குரலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். திருவாளர் கண்ணாயிரத்தின் குரல் அல்லவா அது? அவர் எதற்காக இப்போது இங்கே தன்னைத் தேடி வந்தார்?' என்று சந்தேகத்தோடு தெருக் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கி வந்த சத்தியமூர்த்திக்குத் தெருவில் இன்னும் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. தெருவில் நின்றிருந்த கண்ணா யிரத்தின் காரிலிருந்து அந்தப் பெண்கீழே இறங்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கண்ணாயிரம் அப்போது அவளைத் தன் வீட்டுக்கு எதற்காக அழைத்து வந்தார் என்று புரியாமல் சத்தியமூர்த்தி திகைத்துக் கொண்டிருந்தபோது அவள் தன் நறுமணங்கள் புடைசூழ அவனுக்கு மிக அருகே வந்து தயங்கி நின்றாள்.

(5

米 மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்திநிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதி யாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள்.

தங்கக் கூண்டில் வளர்த்த தமனியப் பசுங் கிளியாய் அந்த

வீட்டின் தனிமையில் ஏங்கி ஏங்கி வளர்ந்தவள் பாரதி. அவள் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/80&oldid=595975" இலிருந்து மீள்விக்கப்பட்டது