பக்கம்:பொன் விலங்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பொன் விலங்கு

தயக்கத்தை அடுத்து இதன் காரணமாகவே வளர்ந்த உரையாடலில் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையும் இப்போது தன் மனத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டு பயந்தாள் பாரதி. அவரும்தான் அப்படித் துடுக்குத்தனமாகப் பேசி அதுவரை தன்னைப் பற்றி அப்பாவின் மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை அந்த ஒரு வினாடிப் பேச்சில் கெடுத்துக் கொண்டிருக்கவேண்டாம். அவர்தான் ஏதோபேசிவிட்டார் என்றால் அப்பாவாவது அந்தச்சிறிய காரியத்தை மறந்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளக் கூடாதா? வயதில் இளைஞர் என்ற ஒரே காரணத்துக்காகச் சத்தியமூர்த்தியைப் புறக்கணித்துவிட்டு இப்போது வந்திருக்கும் இந்த முதியவருக்கு இந்த வேலையைக் கொடுப் பார்கள் என்று எண்ண முயலும்போதே அந்த எண்ணத்திலுள்ள ஏமாற்றத்தின் மிகுதியைத் தாங்க முடியாமல் மண்டை வெடித்து விடும்போல் இருந்தது பாரதிக்கு.

அப்பா இருந்தாற்போல் இருந்து திடீரென்று அப்படி ஓர் அநியாயத்தைச் செய்வார் என்பதையும் அவள் மனமார எதிர்பார்த்து நம்பி ஒப்புக்கொண்டுவிடத் தயாராக இல்லை. அப்படிச் செய்கிறவராக இருந்தால் 'உங்களைப் பலவிதங்களில் எனக்குப் பிடித்திருக்கிறது" என்றும் உங்களைப்போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி' -என்றும் சத்தியமூர்த்தியோடு பேசிக் கொண்டிருந்தபோதும் ஊருக்குச் செல்ல விடைபெறும்போதும் அவரிடம் அப்பா சொல்லியிருக்க மாட்டார். சத்தியமூர்த்தியும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தவற்றையும், பேசிக்கொண்டிருந்த போது நடந்தவற்றையும் ஒவ்வொன்றாக நினைவுகூர முயன்றாள் அவள். அவ்வாறு நினைத்துப் பார்த்தபோது, சத்தியமூர்த்தி தன் பேச்சாலும் தான் நடந்து கொண்ட முறையாலும் தன் தந்தையைக் கவர்ந்த இடங்களே அதிகமாகவும் கவரத்தவறிய இடம் குறைவாகவுமே அவளுக்குத் தோன்றியது. அந்த இளைஞருடைய சாமர்த்தியமான உரையாடலைக் கேட்டுத் தந்தையின் முகம் வியந்து மலர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஞாபகம் கொண்டு மகிழ்ச்சிபெற முயன்றாள்.அவள்.மகிழ்ச்சிக்குரிய பல சந்தர்ப்பங்களாகத் தேடி ஒன்று சேர்த்து அவள் நினைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/86&oldid=595981" இலிருந்து மீள்விக்கப்பட்டது