பக்கம்:பொன் விலங்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 89

முதலில் பேசினார். 'பிரின்ஸிபல் சார் காலையில் வந்திருந்த பையனை எனக்கு எல்லா விதங்களிலும் பிடித்திருந்தது. எதையெடுத்தாலும் விவாதம் செய்து எதிர்த்துப் பேசுகிறான் என்ற துடுக்குத்தனம் ஒன்றைத் தவிர அவனுடைய தோற்றம் படிப்பு எல்லாம் திருப்திகரமாயிருந்தன. வயது கொஞ்சம் குறைவு... மற்றபடி...”

"எனக்கென்னவோ அவனைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. எடுத்தெறிந்து பேசுகிறான். அவனுடைய மொழி வெறியைப் பார்த்தால் ஏதாவது அரசியல் கட்சிகளில் பங்கு கொண்டிருப்பானோ என்று கூடச் சந்தேகப்படுகிறேன். அவன் படித்த கல்லூரியும் அப்படிப்பட்டது. இப்படிப்பட்ட குறும்புத்தனமான திறமைசாலி ஒருவன் நம் கல்லூரியில் புகுந்துகொண்டு மாணவர்களையெல்லாம் தனக்கு தலையாட்டுகிறவர்களாக மாற்றிக் கவர்ந்துவிட்டால் பிறகு கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்துவது எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினையாயிருக்கும். இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இத்தகைய இளைஞனால் மாணவர்கள் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்..."

"மொத்தத்தில் நீங்கள் பயப்படுகிறீர்கள் இல்லையா?" என்று பிரின்ஸிபலைப் பார்த்துக் கேட்டு விட்டு நகைத்தார் பூபதி. எந்த அர்த்தத்தில் நகைத்தார் என்று புரிந்துகொள்ள முடியாத நகைப்பாயிருந்தது அது. சாமர்த்தியசாலிகளை எதிரே சந்திக்கப் பயப்படுகிற அந்த அப்பாவி பிரின்ஸிபலை எண்ணி நகைக்கிறாரா, சத்தியமூர்த்தியின் துடுக்குத்தனத்தை இகழ்கிற பாவனையில் நகைக்கிறாரா... என்று எதிராளி விளங்கிக்கொள்ள முடியாம லிருந்தது அந்தச் சாதுரியமான சிரிப்பு.

அவர்களுடைய உரையாடலின் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதிக்கு நெஞ்சு'திக் திக் என்று வேகமாக அடித்துக் கொண்டது. பிரின்ஸிபல் பேசிய அநியாயத்தை நினைத்து ஆத்திரத்தோடு கைகளைச் சொடுக்கினாள் அவள். நல்ல வேளையாக அவளுடைய நம்பிக்கை முற்றிலும் வாடிக் கருகிவிடாமல் அவள் தந்தையின் பேச்சு சிறிது ஆறுதல் அளிப்பதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/91&oldid=595987" இலிருந்து மீள்விக்கப்பட்டது