பக்கம்:பொன் விலங்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

米 வாழ்க்கையாகிய பந்தயத்தில் இந்த விநாடி வரை பொய்யையும் வஞ்ச கத்தையும் முதலாக வைத்து விளை யாடிக் கொண்டிருக்கிறவர்கள்தான் மிக வேகமாக முன்னால் ஒடிக் கொண்டிருக் கிறார்கள்.

来 சத்தியமூர்த்தியின் உள்ளே வருத்திக் கொண்டிருந்த அந்த நேரத்து மனத்தின் கவலைகளும் வேதனைகளும் அப்போது ஏற்பட்ட இந்தத் திகைப்பினால் சற்றே விலகின. எதிர்பாராத வேளையில் எதிர்பாரத சூழ்நிலைகளில் எதிர்பாரத மனிதரோடு வந்து நிற்கும் அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு முதலில் அடக்க முடியாத கோபம்தான் ஏற்பட்டது. அவளை ஏறிட்டுப் பார்த்தாலோ கோபப்படுவதற்கும் கடிந்து கொள்ளுவதற்கும் அவள் பாத்திரமில்லை என்று தோன்றியது.

அழுது அழுது சிவந்துபோன கண்களும், சோர்ந்து வாடிய முகமுமாக அந்தச் சோர்விலும், வாட்டத்திலும் கூடத் தான் இருப்பதைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிற அழகும் கவர்ச்சியும் மறையாதபடி காட்சியளித்தாள் அவள், பிரபஞ்சமாகிய பெரிய மலர் தன் உயிர் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மலர்கின்ற அந்த வைகறை வேளையில் நட்சத்திரங்களோடு கூடிய நீல வானத்தின் நெடும் பெரும்பரப்பில் அழகானதொரு பகுதியை அப்படியே கிழித்தெடுத்துச் சுற்றிக்கொண்டு கீழிறங்கி வந்த மின்னலைப் போல் கண்ணில் பதிந்து கொண்டு போக மறுக்கும் கட்டழகாய் எதிரே வந்து நின்றாள் மோகினி, குலை குலையாகத் தொங்கும் கருப்புத் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியைப்போல் சுருண்டு நெளியும் கருங்கூந்தல். அதில் சிற்றலையோடி மின்னும் கருமையில் ஓர் அழகு. செவிகளின் ஒரங்களில் குண்டலங்களாய்ச் சுருண்டு சுழன்று கொண்மாக்கம் கோச் சுமர்சியில் ர்ை அமக. சவக்கத் தோப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/95&oldid=595991" இலிருந்து மீள்விக்கப்பட்டது