பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. பொய்ம் முகங்கள்

எம்.இ.ஆர். படி nரியஸ் மிஸ் கண்டக்ட் ஏதாவது காண்பித்துத்தான் டிஸ்மிஸ் செய்ய முடியும்' என்றார்

தலைமையாசிரியர். - வnரியஸ் மிஸ் காண்டக்ட்னா என்னென்ன செய்ய னுமோ அதை எல்லாம் அவன் இங்கே செஞ்சாச்சுன்னு சொன்னால் அதுக்குச் சாட்சியமா வேணும்னு கேட்கப் போறாங்க? செஞ்சுட்டான்னு சொல்லியே நடவடிக்கை எடுங்க என் ஃபிரண்ட்ஸ் முன்னாடி என்னையே இன்ஸ்ல்ட் பண்ணிப் பேச்ற ஒருத்தனை நான் என் ஸ்கூல்லே நீடிக்க விட்டு வேடிக்கை பார்க்க முடியாது' என்றார் ஜமீன்தார். உடனே அவர் தலைமையாசிரியரை விட்டுவிட்டுப் பள்ளிக் கூட ரைட்டரையும், குமாஸ்தாவையும் வரவழைத்து எம்.இ.ஆர். படி ஒர் ஆசிரியர் விஷயத்தில் nரியஸ் மிஸ் காண்டக்ட் என்றால் என்னவென்று விசாரித்தார். சக ஆசிரியைகளிடமோ படிக்கிற வயதுவந்த மாணவி களிடமோ தப்பா நடந்துக்கிட்டார்னு சார்ஜ் ஃபிரேம் பண்ணி டெர்மினேஷன் ஆர்டர் அனுப்பிச்சுடலாமுங்க" என்றார்கள் அவர்கள். - - 'இதுதானா பிரமாதம்? படிக்கிற பொண் ஒருத்திக்குப். பொஸ்தகத்திலே லவ் லெட்டர் எழுதி வச்சுக் குடுத்துட் டான்னு போட்டு டிஸ்மிஸ் பண்ணுங்க...' "சும்மா எப்பிடிங்க போடறது? ஒண்னு அப்பிடிக் குடுக்கறப்ப யாராச்சும் பார்த்திருக்கனும்! அல்லது அவரு யாருக்கு லெட்டர் எழுதினாரோ அந்தப் பொண்ணே வந்து ஹெச். எம். கிட்டக் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும்.' - ஒரு பொண்ணு என்ன? ரெண்டு மூணு பொண்ணுங்க வந்து கம்ப்ளெயிண்ட் குடுத்ததாகவே சொல்லுங்க. கிளாஸ்லே அடிக்கடி கையைப் பிடிச்சு இழுக்கிறான்னு .கூடப் புகார் வந்ததா எழுதிக்குங்க. அதெல்லாம் இல்லேன்னு அவன் எப்பிடி ஆட்சேபிக்க முடியும்?"