பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'100 பொய்ம் முகங்கள் அடிகளார் பலத்த விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் அடிக்கடி ஆளானார். ஆனால் சுதர்ச னனிடம் மட்டும் அவர் எப்போதும்போல் பிரியமாகப் பழகி வந்தார். அன்றிருந்த சூழ்நிலையில் மகபதி அடிகளாரைத். தானோ தன்னை அவரோ சந்திக்க முடியுமா என்பது சுதர்ச. னுைக்குத் தெரியவில்லை. மகபதி அடிகளாருக்கும் பொது வாழ்வில் பல சங்கடங்கள் இருந்தன. மான்தோல் ஆசனம். விபூதிச் சம்புடம், காவி உடைகள், கழுத்து நிறையத் தங்கப் பூண் பிடித்த உருத்திராட்ச மாலைகள் விழுந்து கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளுகிற பக்தர்கள், இவ்வளவுக்கும் மேல் மேடையில் ஏறி நின்று "பேரறிஞன் இங்கர்சால் கூறுவது என்னவென்றால்...' என்பதாகத், தொடங்கி அடிகளார் பேசுவதைப் பொதுமக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. மகபதி: அடிகளாருக்கோ மடத்துச் சொத்து, கார், வசதிகள் எல்லாம் வேண்டியிருந்தது. மேடையில் பேசும் சீர்திருத்தச் சாமியார் என்ற புகழும் வேண்டியிருந்தது. சாமியாரா னப்புறம் அவரைப் பார்க்க ஒரு முறை மன்றக்குடிக்குப் போயிருந்தான் சுதர்சனன். பழைய நண்பன் என்ற முறை: யில் அவரே அவனை வரச் சொல்லிக் கூப்பிட்டிருந்தார். 'சாமீ! எப்போ மடத்துப் பொறுப்பிலே இருக்கீங்: களோ அப்போ நீங்க தெளிவா ஒரு வழியிலே ஒரு முகத் தோடு நடந்து போகணும். மேடையிலே ஒரு முகம, பூஜை: அறையிலே ஒரு முகம், பக்தர்களுக்கு முன்னாடி ஒரு முகம். பக்தர்கள் அல்லாதாருக்கு முன்னாடி வேறொரு முகமனு, பல முகங்களைக் காட்டப்படாது. பணத்துக்காக நமக்குப் பிடிக்காததைச் சகிச்கக்கிறது. நிஜமான சுயமரியாதைக் காரன் செய்ய முடியாத காரியம். என்னைக் கேட்டா ஃப்ராங்காச் சொல்றேன். உங்க இயல்புக்கு நீங்க ருத்திராட்சமாலையைப் போட்டுக்கிட்டு மடத்துக்குள்ளார். நுழைஞ்சிருக்கிறதே எனக்குப் பிடிக்கலே. பதவிக்காகவிஷ-க்காக நமக்குப் பிடிக்காததையும், நாம நமபாததை. யும் செய்யலாம்னா எப்படி? நான் முகத்துக்கு நேரேயே