நா. பார்த்தசாரதி 1 0 1 இப்பிடி எதிர்த்துக் கேட்கிறேனேன்னு நினைச்சுக்காதீங்க. எனக்கு உங்க மேலே சாமி.கீ.மின்னு பயம் பக்தி எதுவர மில்லே. அதனாலே வேண்டிய நண்பர்ங்கிற முறையிலே பயப்படாமே இதைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்க” என்று சுதர்சனன் அப்போது அவரைக் கேட்டிருந்தான். அதிலிருந்து அவருக்கும் சுதர்சனனுக்கும் சரியாகப் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்ட து, تسمیه இப்போது இன்று அந்த அடிகளார் ஆதர்சபுரத்தில் அருள் நெறி ஆனந்தமூர்த்தியின் பங்களாவில் வந்து தங்கப் போவதாகச் சுதர்சனன் கேள்விப்பட்டிருந்தான். சாமியார் களுக்கும் பணக்காரர்களுக்கும் எதிலும் எல்லா வேளை களிலும் எந்த ஊரிலும் ஒத்துப்போவதைச் சுதர்சனன் கவனித்திருந்தான். அருள் நெறி ஆனந்தமூர்த்தியைப் பக்கா சமூக விரோதியாகவும், பிற்போக்குவாதியாகவும் ஃபா ஸிஸ்ட் ஆகவும் கருதி வெறுத்துக் கொண்டிருந்தான் சுதர்சனன். ஒரு பக்கம் இங்கர்ச்ாலிலிருந்தும் கார்ல் மார்ச் ஸிலிருந்தும் மேற்கோள்களை மேடையில் எடுத்துச் சொல்லி விட்டு மறுபுறம் நிலப்பிரபுக்களோடும், ஜமீன்தார். களோடும் சுமுகமாகிப் பழகி அவர்களுக்கு வள்ளல் பட்டம் கட்டிக் கொண்டிருக்கிற சாமியாரை ரஸ்புடின் சாமியார்’ -என்று கருதாமல் வேறு எப்படிக் கருதுவதென்று சுத்ர்சன: னுக்குப் புரியவில்லை. பிற்பகல் இரண்டரை மணிக்கு மன்றக்குடி மகபதி, அடிகளாரின் கார் டிரைவர்-காரோடு ஸ்கூலுக்குத் தேடி வந்து, 'சாமி உங்களைக் கையோட கூட்டியாரச் சொல்விச். சுங்க! இங்கேதான் அருள்நெறி ஆனந்தமூர்த்தி வீட்டிலே’ தங்கியிருக்கு, உடனே உங்களைப் பார்க்கணும்னுச்சு"என்றான். , - . 'நான் அங்கெல்லாம் வர்ரத்துக்கில்லேப்பா. அவரு இங்கே ஸ்கூலுக்குப் பேச வர்ரப்பேர் இங்கேயே வார்த்துப் பேசிக்கிறேன்னு போய்ச் சொல்லிடு'- என்று டிரைவரை யும் காரையும் திருப்பி அனுப்பிவிட்டான் சுதர்சனன்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/103
Appearance