நா. பார்த்தசாரதி 103 ஆபாசமான முறையில் காதல் கடிதங்களை எழுதி வை த்துக் கொடுத்ததாகச் சுதர்சனன் மேல் சார்ஜ் ஃப்ரேம் செய்யப் .பட்டிருந்தது. இப்படிக் குற்றம் சாட்டினாலொழிய எம்.இ. ஆர்ச்படி வீரியஸ் மிஸ் காண்டக்ட் என்று காரணம் காட்டி சுதர்சனனை உடனே டிஸ்மிஸ் செய்ய முடியாமல் போய்விடும். ஆகவே இப்படி ஒரு ஜோடனை செய்ய வேண்டியிருந்தது. சாதாரணமாகப் பள்ளிக்கூட சம்பந்தப். பட்ட விழாக்கள் எதற்கும் ஆதர்சபுரம் ஜமீன்தார் வர மாட்டார். கலெக்டர், மந்திரிகள், பெரிய பிரமுகர்கள் யாராவது வந்து கலந்து கொள்கிறார்ரள் என்றால்தான் ஜமீன்தார் அபூர்வமாக வருவார். ஜமீன்தார் வந்தால் போட்டோ கிராபஃபருக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் விழா முடிந்த பின்பு தலைமையாசிரியர் ஒரு வசைமாரியைத் தாங்கிக் கொள்வது தவிர்க்க முடியாமல் போய்விடும். - - அன்று பள்ளிக் கூடத்திற்கு மன்றக்குடி மகபதி அடிகளார் வர இருப்பதனால் அவரோடு அருள் நெறி. ஆனந்த மூ ர் த் தி யும் வருவதாயிருந்தார். ஆனந்த மூர்த்தியைப் போன்ற ஒர் எஸ்டேட் உரிமையாளரும் மகபதி அடிகளும் வரும்போது தான் போகாவிட்டால் நன்றாக இராதென்று ஜமீன்தாரும் வர முடிவு செய்திருந் தார். இதில் பெரிய தர்ம சங்கடம் என்னவென்றால் அடி களார் காரில் வந்து இறங்கி ஆனந்த மூர்த்தியின் பங்களா வில் படியேறி நுழைவதற்குள்ளே இரண்டு மூன்று முறை. சுதர்சனன் பெயரைச் சொல்லி அவனைப் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டார். ஜமீன்தாரும் ஆனந்தமூர்த்தியுமோ முதல் நாளிரவு சீட்டாட்டத்தின் போதே சுதர்சனனுக்குச் சீட்டுக்கிழித்து அனுப்பிவிடுவது என்று முடிவு செய்து கொண்டு விட்டிருந்தார்கள். அடிகளாரும் சுதர்சனனும் பள்ளிக்கூடத்திலே , எங்காவது சந்தித்துக்கொண்டு விட நேர்ந்தால் அடிகளாரின் நிர்ப்பந்தத்திற்காவது சுதர் சனனை மறுபடி வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/105
Appearance