நா. பார்த்தசாரதி 105 மறைவின்றிப் பேசியிருக்கும் நிர்ப்பயமான பேச்சுக்கள் பசுமரத்தானிபோல் அவருள் பதிந்திருந்தன. 'சரி பள்ளிக்கூட விழாவுக்குப் போகும்போது அங்கே அவனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்கே ஒடிப் போகப் போகிறான்?’-என்று நின்ைத்துக் கொண்டார் அடிகளார். அடிகளாரைச் சந்திப்பதற்கு யார் யாரையோ பெரிய மணி தர்களை அழைத்து வந்தார் ஆனந்தமூர்த்தி. எல்லாருமே வசதி படைத்தவர்களும், பணக்காரர்களும், நிலப்பிரபுக் களுமாக இருந்தார்கள். அடிகளாரின் அருளால் தங்கள் செல்வமும், புகழும், வசதிகளும் மேலும் மேலும் பெருகும் என்ற"சுயநல நம்பிக்கையோடு விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கிப் பூசிக் கொண்டார்கள். கை கட்டி வாய் பொத்தி விலகி நின்று பயபக்தியோடு அவரிடம் மரியாதையாகப் பழகினார்கள். சுதர்சனன் இப்படியெல்லாம் தன்னிடம் செயற்கையாகப் பழக மாட்டான் என்பது அடிகளாருக்கு நினைவு வந்தது. சுதர்சனன் விழுந்து கும்பிட மாட்டான். விபூதி வாங்கிப் பூசமாட்டான் என்றாலும் அன்பாக மரியாதையாக, மனத்திலிருப்பதை ஒளிக்காமல், மறைக் காமல் பழகுவான். அவனுக்கு ஏமாற்றத் தெரியாது. நடிக்கத் தெரியாது. வந்தவர்களுக்காக அவரால் மகிழ முடியவில்லை. வராமலிருந்த சுதர்சனனுக்குத்தான் அவர் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. - "ஏன் சாமீ. இந்தத் தமிழ் வாத்தியாருங்க எல்லாருமே திமிர் புடிச்சவங்களா இருக்காங்களே? இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் அறிவுரை சொன்னால் தேவலை சாமி!' என்று இருந்தாற்போலிருந்து அருள் நெறி ஆனந்தமூர்த்தி ஏதோ பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தபோது, "ஆமாங்க! ரொம்ப மோசம்! அவங்களுக்குச் சாமி, பூதத்துல நம்பிக்கை இல்லே. பணிவு கிடையாது. எடுத்தெறிஞ்சு பேசறாங்க"என்றார் உடனிருந்த கவுண்டர். தன் மகனுக்குச் சுதர்சனன் தான் கலப்பு மண ஏற்பாடு செய்தான் என்கிற பழைய கோபத்தில் இன்னும் இருந்தார் கவுண்டர். அவரால் சுதர்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/107
Appearance