நா. பார்த்தசாரதி 3. இருந்தார். "அவுட்டோர் கேம் ஆகிய பூப்பந்து, ரிங் டென்னிஸ் ஆட்டங்களின் போது மட்டுமல்லாமல் "இண்டோர்கேம் ஆகிய கேரம் போன்றவற்றை விளை யாடிக் கொண்டிருந்தாலும்கூட மாணவிகளுக்கு நடுவே அவரும் போய் ஒட்டிக்கொண்டார். இதனால் அவரே போய் நடத்தவேண்டிய பல வகுப்புக்களுக்கு அவர் போக மூடியாமல் அந்த நேரத்தில் ஒய்வாக இருக்கும் வேறு. ஆசிரியர்கள் தலையில் அந்த வேலை கட்டப்பட்டது. ... -- 'அவரு முன்னாலே எல்லாம் இப்படி இல்லே. ஒழுங்கா "கிளாஸ் அட்டெண்ட் பண்ணுவாரு. ஸ்கூல் நிர்வாக வேலைகளையும் உடனுக்குடனே கவனிப்பாரு. சம்சாரம் தவறிப்போனதிலேருந்துதான். இந்த மாறுதல்'-என்று தலைமையாசிரியருடைய மாறுதலுக்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. தலைமையாசிரியருக்கே ஒரு வயது வந்த பெண்ணும், பையனும் இருந்தார்கள். பையன் சேலத்துக்குப் பக்கத்தில் ஏர்க்காட்டில் படித்துக் கொண்டிருந்தான். பெண் திருச்சி யில் தாய்வழி மாமன் வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது கல்யாணத்தைப்ப்ற்றி அவர் நினைக்கவில்லை. ஆதர்சபுரத்தில் தலைமையாசிரியர் வாசுதேவன் மட்டும்தான் தனி ஆளாக ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். சமையலுக்கு ஆள் இருந்தான். ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூலுக்கு அவர் தலைமையாசிரியராக வந்து அதிக நாட்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை. எல்லாத் தலைமையாசிரியர்களுக்கும் இருப்பதைப்போல் வந்த புதிதில் அவரைப் பற்றியும் ஓர் அத்து இருந்தது. இனம் புரியாத ஒருவகை மரியாதையும் இருந்தது. நாளாக நாளாக அவை எல்லாம் கரைந்துபோய் அவரைப் பற்றியும் அவர் தொடர்பான சம்பவங்களைப் பற்றியும் வெறும் அரட்டைகளும் திண்ணைப் பேச்சுக்களுமே ஊரில் மீத மிருந்தன. அவர் இல்லாத இடங்களில் அவர் இல்லாத சமயங்களில் அவரைப் பற்றிப் பேச நிறையக் கேலியும்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/11
Appearance