நா. பார்த்தசாரதி I 13 செண்ட் வாசனை அவரை முந்திக் கொண்டு வந்தது. டெரி காட்டனில் ஒரு முழுக்கைச் சட்டையும் அதற்குமேல் கைத் தறியில் இருவண்ணக் கரையிட்ட துண்டுமாக அவர் தோன் றினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த பத்துப் பன்னி" ரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் வக்கீல் வீட்டுத் திண்ணையி லேயே உட்கார்ந்து விட்டது. இப்படி அரசியல்வாதிகளுக்கு ஒரு வசதி. அவசர அவசரமாக ஒரு கூட்டம் நடத்தவேண் டும் என்றால் கூட உடனிருக்கும் இந்தப் புத்துப் பன்னி ரண்டு பேரையே உட்கார வைத்து அவர்களையே கை, தட்டச் சொல்லி விடலாம். கையோடு ஹாண்டியாக ஒரு செட் ஆடியன்ஸையே கூட வைத்துக் கொள்ளும் வசதி திறமை எல்லாம் மணவை மலரெழிலன்போன்ற பேர்வழி களுக்கு இருந்தது. மிட்டா, மிராசுகள், ஜமீன்தார், நிலச் கவான்தார்கள் எல்லாம் கொள்கை அளவில் மேலோட்ட மாக ஒழிக்கப்பட்டுவிட்டது போல் தோன்றினாலும், புதிய பெயர்களில் புதிய நடை உடைகளில் அவர்கள் நாட்டில் தோன்றி உலாவிக் கொண்டிருப்பது எதிரில் கண்கூடாகத் தெரிந்தது. -- . . . . வாங்கோ! வாங்கோ!'-என்று வாயெல்லாம் பல்லாக மலர்ந்து எழுந்து நின்று மலரெழிலனை வரவேற். றார் ராமாநுஜாச்சாரியார். சுதர்சனனையும் அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவனை பேசவிடவில்லை. அவரே முந்திக்கொண்டு, - "சாருக்கு ஒரு ப்ராப்ளம்! உங்களைத் தவிர வேறு யாராலேயும் அதைத் தீர்த்து வைக்க முடியாது. நீங்கதான் இத்ை முடிச்சுத் தரணும்'-என்று ஆரம்பித்து விட்டார். மலரெழிலன் மேலே கடைசி இரண்டு பித்தான்கள் போடா மலிருந்த தன் நெஞ்சைத் தானே பார்த்துக் கொண்டு முகம் மலர்ந்தார். "என்னன்னு சொல்லுங்க! பார்த்து முடிச்சுப் போடுவோம். நாமே செய்யமுடியாட்டி வேறே யாரு இதெல்லாம் செய்யப் போறாங்க? செய்யறதுக்கு முன்னாடி "என்னென்ன விவரம்னு எல்லாம் இந்த சார் கிட்டச். சொல்லிட்டீங்கள்ளே? அப்புறம் பின்னாடி.வீண் தகராறு
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/115
Appearance