பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I H 4 பொய்ம் முகங்கள் கூடாது. முதல்லியே கறாராப் பேசிக்கிட்டா வம்பில்லாம இருக்கும் என்ன? நான் சொல்றது சரிதானே?-என்றார் .மணவை மலரெழிலன், - - -இந்த வார்த்தைகளின் மூலம் ஏதோ பேரம் பேசப் படுகிறது என்பது சுதர்சனனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. - - 12 இந்தக் குதிரையின் மேல் பணம் கட்டினால் ஜெயிக் கும் என்று கூறுகிறவர்களைப்போல் மணவை மலரெழிலன் போன்றவர்கள் அரசாங்கத்தையே ஒரு குதிரைப் பந்தய மாக நடத்தி ஜெயிக்கிற குதிரைகளின் மேல் பணம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஏழைகள்-மேட்டுக்குடி மக்கள் என்று பிரித்துப்பிரித்துப் பேசியே தன்னளவில் தானும் ஒரு புதிய மேட்டுக் குடி ஆகிவிட முயலும் ஒரு சம காலத்து நவீனவர்க்கம் சுதர்சனனுக்குத் தெரிந்தது. அவன் அந்த வக்கீல் இராமநுஜாச்சாரியிடமிருந்தும், மணவை மலரெழிலனிடமிருந்தும் தப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவன் முன்பு ஐயாவிடமே ஒருமுறைக்கு நேருக்கு நேர் வாதாடியிருந்தான். ஐயா தயாரித்தனுப்பிய சீர்திருத்தவாதிகளில் பலர் சாமியை நம்பமாட்டேன்னிட்டு அதே சமயத்திலே பணத் தையே சாமியாக நம்பிக் கும்பிடறாங்க. சாதி கிடையா துன்னிட்டு ஊரூராய் பணம் படைச்ச பெரிய மனுஷனைத் தனிச் சாதியா உயர்த்தி மதிச்சிக் கும்பிட்டு மரியாதை பண்றாங்க. சாமியைக் கும்பிடறதில்லே. அதே சமயத்திலே வசதியுள்ளவனைக் கண்டு பயந்து மதிக்கறாங்க. இதெல் லாம் என்னாலே ஏத்துக்க முடியலே.-- "என்ன செய்யிறது தம்பி! நம்பளவங்கள்ளேயே பலர் சுயமரியாதை இயக்கத்தைச் சரியாப் புரிஞ்சுக்கலே, பழைய,