உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 1 7 -இன்னிக்கி உங்க பேச்சு ரொம்பப் பிரமாதங்க எல்லாக் கருத்தையும் கோவையா அழகாச் சொல்லிட்டீங்க' என்று புகழ்ந்துவிட்டு அப்புறம், "அடுத்த மாதம் ஆலம்பட்டியிலே ஒரு பட்டி மன்றம் ஏற்பாடாகியிருக்கு. அதுக்கு சாமிதான் தலைமை தாங்கணும்னு அந்த ஊர்க்காரங்க ஆசைப்பட நாங்க. நீங்க கண்டிப்பா ஒத்துக்கணும்'-என்று வேண்டி யிருப்பார். - - - பட்டிமன்றத்துக்குத் த ைல ைம தாங்குவதைப் பொறுத்து அடிகளாருக்கு ஒரு கிராக்கி இருந்தது. எல்லாப் பட்டிமன்றங்களிலும் பாங்க் பாலன்ஸ் ஷீட் போல ஐந் தொகை போட்டுச் சமத்காரமாகத் தீர்ப்புச் சொல்வதில் வல்லவர் அவர். அவ்வப்போது ஜனங்களுக்குச் சில இனிய அதிர்ச்சிகளையும் அளிக்கவல்ல திறமை அவருக்கு இருந்தது. 'மக்களுக்கு நலம். தருவது இல்லறமா துறவறமா?என்று தலைப்பு இருந்தால் அடிகளார் நலம் தருவது இல்லறமே-என்று தீர்ப்பளிப்பார். "வாழ்வுக்கு இன்பம் தருவது காதலா. தியாகமா?-என்றிருந்தால் அடிகளார் "காதலே'-என்று தீர்ப்பளிப்பார். கேட்கின்ற பொது மக், களுக்கு அவர் நிர்தாட்சண்யமாகத் தீர்ப்புச் சொல்கிறார். என்பதுபோல,ஒரு வியப்பை இது உண்டாக்கும். காதல் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு அரணாக மூன்று. கருத்தைச் சொன்னார்கள். தியாகம் தரப்பைச் சேர்ந்தவர் கள் தங்கள் கட்சிக்கு அரணாக இரண்டு கருத்துக்களை மட்டுமே சொன்னார்கள். மூன்றிலிருந்து இரண்டைக் கழித்தால் ஒன்று மீதப்படுகிறது. இரண்டு கட்சிகளின் வாதங்களிலும் இருந்த பலங்களையும், பலவீனங்களையும் கழித்து விட்டுப் பார்க்கும்போது காதல் கட்சியே வலிமை யாகத் தோன்றுகிறது. ஆகவே காதல் வெற்றி பெறுகிறது. காதலுக்குத் தியாகம் விட்டுக் கொடுக்கிறது' என்று அடி கள்ார் நாசூக்காகத் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் கை தட்டல் ஒய்வதற்குப் பத்து நிமிஷம் பிடிக்கும். 'கண்ணகி பொ-8