பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பொய்ம் முகங்கள் கிண்டலும் மீதமிருந்தன. அவர் எதிரே இருக்கும்போது ஒரு. ப்ோலியான வழக்கமான வெற்று மரியாதை அவருக்குக் காட்டப்பட்டது. நாற்பத்தெட்டு வயது நிறைந்திருந்தும் அவர் தலையில் கொஞ்சங்கூட நரையில்லை. எடுப்பான முகமும் அளவ்ான உயரமும் இருந்தாலும் மூக்கு மட்டும். கருடாழ்வார் மாதிரி அமைந்திருந்து முக லட்சணத்தை, ஒரளவு கெடுத்து விட்டது. எலுமிச்சம் பழநிற மேனியும் பருமனில்லாத உடம்புமாக வற்றிய வாசுதேவனுடைய தோற்றத்தில் இளமையும் தெரியாமல் முதுமையும் தெரி யாமல் நடுத்தர வயதுதான் தெரிந்தது. பருவப் பிரிவுகளில் எதிலும் அடங்காத ஒரு தோற்றம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். ४ ४ . - தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சனன் தலைமை: யாசிரியருக்கு நேர்மாறான குணமும் தோற்றமும் அமையப் பெற்றிருந்தான். ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் அவன் அந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தான். திருவையாறு கல்லூரியிலே தமிழ் வித்துவான் படிக்கும்போதே முதலில் சுயமரியானத். இயக்கம், பின்பு தி.மு.க. என்று அரசியல் சார்புகள் கொண் டிருந்த சுதர்சனனிடம் கொஞ்சம் பருவமும் அறிவும் பக்குவப்படப் பக்குவப்படப் பொதுச் சிந்த்னைகள் வளர்ந்து பழைய சார்புகள் எல்லாம் தவிர்ந்திருந்தன. சார்புகள் தானே தன்மேல் ஏற்றிருந்த தளைகள் என்று பின்ன்ால் அவற்றைப் பற்றி அவனே உணர முடிந்திருந்தது, ஒவ்வொரு மனிதனும் பிறர் தனக்குஇடுகிற தளைகளையும். சிறைகளையும் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறானே ஒழியத் தானே தன்னையறியாமல் தனக்கு இட்டுக்கொள் ளும் தளைகளையும் சிறைகளையும் பற்றி ஏனோ அதிகம் கவலைப்படுவதில்லை. உண்மையில் மிகவும் அபாயகரமான வையும், சிந்தனையையும் அறிவையும் மந்தப்படுத்திவிடுகிற வையுமான தளைகளும், சிறைகளும் ஒருவன் தனக்குத் தானே இட்டுக் கொள்பவைதான் என்பது சுதர்சனனுக்கு,