நா. பார்த்தசாரதி - 1 21 பக்வலை வேண்டாம் இப்பவே அதைச் சரிக்கட்டிட லாம். நான் நம்ப ஆனந்தமூர்த்திகிட்டவும் முடிஞ்சா ஜமீன்தாரிட்டவும் இப்பவே பேசறேன்! வேலை மறுபடி கிடைச்சிடும்-' சரிக்கட்டறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரிக் கட்டற முயற்சிக்காகவும் நான் இங்கே வரலே. நான் வராட்டி நீங்க அங்கே என்னைத் தேடிக்கிட்டு வந்துடு: விiங்கன்னாங்க. அகாலத்திலே உங்களைச் சங்கடப் படுத்தக் கூடாதுன்னுதான் இங்கே வந்தேன்!” 'அதெல்லாம் சும்மா முரண்டு பிடிக்கப் படாது சுதர் சனம் நான் என் செல்வாக்கைப் பயன்படுத்தி இதே வேலையைத் திரும்ப வாங்கித்தரேன். நான் சுமுகமாக எடுத்துச் சொல்லி அவங்களை எல்லாம் சரிப்படுத்தினப் புறம் நீ மாட்டேன்னு உதறி என் முகத்திலே கரியைப் பூசிடக் கூடாது.” - ... - நீங்க இப்பிடிப் பயப்படறதாலேதான் நான் உங்களை எனக்காக எதுவும் பண்ண வேணாம்னு சொல் றேன்.' - "நாளைக்கு நீதான் கஷ்டப்படுவே. இதிலே எனக் கொண்ணும் இல்லே...' 'கஷ்டப்படக் கூடாதுங்கிறத்துக்காக மான நஷ்டப் :பட நான் தயாராயில்லே. - "தமிழனுக்குத் தமிழன் மான நஷ்டப் படறதிலே தப்பில்லே...' - என்ன சொல்றிங்கன்னு புரியலேயே? இனவுணர்ச்சி, மொழி உணர்ச்சி, சாதி உணர்ச்சி இதையெல்லாம் துறவியா இருக்கிற நீங்களே அடிக்கடி தூண்டினா எப்பிடி? உலகத்திலே ரெண்டே இனம்தான். உண்டு. நல்லவன், கெட்டவுன், ஏழை, பணக்காரன். உழைக்கிறவன், சுரண்டுகிறவன்னுதான் இனிமே இனங் களைப் பிரிக்கனும்.' -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/123
Appearance