பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 125 'அதெப்படி? நீங்க டிஸ்மிஸல் ஆர்டர் கொடுத்தீங்கள் இமறுபடி ரீ இன்ஸ்டேட் பண்ணி ஆர்டர் கொடுங்க. சும்மா கொடுத்தா மட்டும் போதாது, nரியஸ் மிஸ்காண்டக்ட் அது இதுன்னு சார்ஜ் ப்ரேம் பண்ணினிங்களே, அதை எல்லாம் வாபஸ் வாங்கிட்டு ஆர்டர் தரணும்...' - "எல்லாம் டைப் ஆயிண்டிருக்கு. உடனே அனுப் பறேன். நீங்க ஆர்டரை வாங்கிண்டு இன்னிக்கே கண்டிப்பா ஸ்கூலுக்கு வாங்கோ, போறும்.' - . சுதர்சனன் சரி என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். அவர் போய்ச் சேர்ந்தார். அவர் போன் ஒருமணி நேரத்துக்கெல்லாம் பள்ளி ப்யூன் நாதமுனி ஆர்டரோடு வந்து சேர்ந்தான். சுதர்சனன் நிபந்தனை. போட்டப்படியே ஆர்டர்கள் இருந்தன. கையெழுத் திட்டு ஆர்டரை வாங்கிக் கொண்டான். பத்து மணிக்கு ஸ்கூலுக்கும் போனான். அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட்டுவிட்டு அரை நாள் வேலை செய்தான். பிற்பகல் இரண்டு மணிக்கு யாரும் எதிர்பாராதவிதமாக இராஜி நாமாக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினான். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டைக் காலி, செய்து கொண்டு புறப்படும் நோக்குடன், பண்டங்கள்ை ஒழிக்கத் தொடங்கினான். தகவல் தெரிந்து சுயமரியாதை மன்ற உள்ளூர்ச் செயலாளர் பன்னீர்செல்வம் வந்தான் வரும்போதே கோபத்துடன் தான் வந்தான் அவன். என்னண்னே! ஏதோ கேள்விப்பட்டேன். நெஜந் தானா? கூட்டம் பேர்ட்டு ஹெட்மாஸ்டர் குலப் புத்தியைக் காமிச்சிட்டாருன்னு பேசட்டுமா?" சே! சே! நீ பேசற பாணியே எனக்குப் பிடிக்கலே’ உனக்கு வேண்டாத ஒரு சாதிக்காரனே எல்லாத் தப்புக்கும் காரணம்னு பேசிப் பேசியே நீ பழகியாச்சு. முதல்லே அதை மாத்திக்க நீ பழகணும். தப்புப்பண்றவன் எல்லாச் சாதிவியும் இருக்கான்: ஹெட்ம்ாஸ்டரு அப்பாவி. முந்தா தாள் ஜமீன்தாரு என்னைப் போகச்சொன்னாரு மறுபடி