பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பொய்ம் முகங்கள் அடிகளார் தலையிட்டு இன்னிக்கிக் காலையிலே புது: ஆர்டர் கொடுத்தாங்க. மதியம் நானே இராஜிநாமாப் பண்ணிட்டேன்." 'விடுதலைலே போடச்சொல்வி நியூஸ் அனுப்பட்டுமா? "ஹெட்மாஸ்டரின் இனவெறின்னு முதல் பக்கத்திலே வரும்...” - - - 'திரும்பத் திரும்ப உளறாதே பன்னீர்செல்வம்! இந்த ஹெட்மாஸ்டரு வாயில்லாப் பூச்சி. போடறதானா "ஜமீன்தாரின் தர்பார்-னு போடு, போட முடியுமா? நீயும் உங்க தோழர்களும் முப்பது வருஷமா ஒரே சாதிக்காரனைத். திட்டித் திட்டி மட்டுமே பழகிட்டீங்க. ஜமீன்தார் அந்த ஜாதி இல்லே. அதனாலே நியூஸ் வராது. தீங்கு செய்யறது ஒரே ஜாதியாத்தான் இருக்கணும்னு தீர்மானமா வச்சிருக் கீங்க-' என்று சொல்லியபடியே சுவர்ப்படங்களைக் கழற். றிக்கொண்டிருந்த சுதர்சனம், "இந்தா! பக்கத்து ஊர்ப் பகுத்தறிவாளர் மன்றத்திலே வைக்க ஐயா படம் வேணும் னியே? இந்தப் படத்தை என் அன்பளிப்பா வச்சுக்க-" என்று பன்னீர்செல்வத்திடம் கொடுத்தான். ஏன் உங்களுக்கு வேணாமா அண்ணே?- என்று வினவினான் பன்னிர்ச்செல்வம். .. . 'எனக்கு இதுரெண்டும்போதும்-' என்று கையிலிருந்த கார்ல் மார்க்ஸ் படத்தையும், லெனின் படத்தையும் காட் டினான் சுதர்சனன். பன்னீர்செல்வம் தயக்கத்தோடும் சம்சயத்தோடும் சுதர்ச்னனிடமிருந்து ஐயா படத்தைத் தன் கையில் வாங்கிக் கொண்டான். - எங்கண்ணே போகப் போlங்க?" 'மெட்ராஸ் போறேன். அங்கே என் நண்பர் ஒருத்தரு. டுட்டோரியல் காலேஜ் வச்சிருக்காரு. அதுலே இவ்வளவு சிரமம் இருக்காது. நெறிைய சுதந்திர்ம் இருக்கும். 'முன் னாடியே நண்பர் கூப்பிட்டாரு. படிச்சுப் பாஸ்: பண்ணின் உடனேயே டுட்டோரியல்லே நுழைய வாண்