உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

дѣт. பார்த்தசாரதி 127 டாம்னு பார்த்தேன். இப்போ அதுவே தேவலாம்: போலத் தோணுது...' . - என்னை எல்லாம் மறந்துடாதீங்க. மெட்ராஸ் வந்தாப் பார்க்கிறேன், முகவரி கொடுத்திங்கன்னா நல்லது. ஒரு பிரிவுபசாரம் நடத்தலாம். நம்ம கழகத் தோழர் களுக்குத் தகவல் சொல்லக்கூட் அவகாசம் இல்லாமல் அவசரமாப் புறப்படlங்க நீங்க..." - - "அதெல்லாம் வேண்டாம். இந்தா என் நண்பனோட. முகவரி. இது மாறி வேற இடத்திலே தங்கினா உனக்கு மறுபடி எழுதறேன்-' + . - ஒரு மணி நேரத்தில் பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்துப் பிரயாணத்துக்குத் தயாராகி விட்டான் சுதர்சனன். 14. ஆதர்ச புரத்திலிருந்து பக்கத்து நகரத்திற்குப் பஸ்" பிரயாணம் செய்து அன்றைய மாலை இரயிலையே பிடிப்பது: சற்றுச் சிரமமாகத் தான் இருந்தது. ஆனாலும் இரயிலைப் பிடித்து இடமும் கிடைத்துவிட்டது. . * சுதர்சனன் மறுநாள் கால்ை சென்னை எழும்பூரில் இறங்கியபோது நன்றாக விடியக்கூட இல்லை. சட்டைப் பையிலிருந்து நண்பனுடைய டூட்டோரியல் கல்லூரி விலா சத்தை எடுத்துப் பார்த்தபோது பெல்ஸ்ரோடு-திருவல்லிக் கேணி என்று இருந்தது. w போர்ட்டர் வைத்துக் கொள்ளாததனால் கையில் பெட்டி படுக்கையோடு மியூஸிகல் சேர் விளையாட்டுக்கு ஒடுகிற மாதிரி இங்கும் அங்கும் ஒடி ஒர் ஆட்டோ ரிக்ஷா பிடித்தபின் அவன் சுதர்சனனிடம் மீட்டருக்கு மேல் இரண்டு ரூபாய் கூடக் கொடுத்தால்தான் திருவல்லிக்க