# 28 பொய்ம் முகங்கள் கேணிக்கு வரமுடியுமென்று நிபந்தனை போட்டான். நம்பிக்கையோடு பெட்டி படுக்கையை ஆட்டோவுக்குள் வைத்திருந்த சுதர்சனனுக்கு இந்த நிபந்தனை எரிச்ச லூட்டியது. மறுபடியும் பெட்டி படுக்கையோடு தெருவில் நின்று வாகனம் தேட முடியாததால் சுதர்சனனே "ஆட்டோ டிரைவரின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாக வேண்டியிருந்தது. கையாலாகாத நிலைமையோடு இணைந்த கோபத்துடன் சுதர்சனன் பெட்டி படுக்கை யுடன் ஆட்டோவில் அமர்ந்தான். டிரைவரோ பிரயாணி யின் மெளனமே சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டு விடவில்லை, அதிகப்படியாக 2 ரூபாய் போட்டுத் தரச் சம்மதம் என்று பிரயாணியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தாலொழிய அவன் விடமாட்டான் போலிருந்தது. "'என்னா சார் ரெண்டு ரூபா மேலே போட்டுக் குடுப் பியா? சொல்லு?-என்று அவன் கேட்ட கேள்விக்குச் சம் மதம் என்பதுபோலத் தலையை ஆட்டிய பின்புதான்காது பொறுக்க முடியாத கர்னகடுரமான இரைச்சலோடு ஆட்டோ எழும்பூர் ஸ்டேஷன் முகப்பிலிருந்து ஸ்டார்ட் ஆகிக் கிளம்பியது. - - . . பெல்ஸ் ரோடில் தன் நண்பனுடைய டுட்டோரியல் காலேஜ் வாசலில் போய் இறங்கினபோது நண்பனும் இன் -னும் சுதர்சனனுக்குப் பெயர் தெரியாத புதியவர்க்ள் இரண்டு மூன்றுபேருமாகக்கையில் பெரியபெரிய ரோஜர்ப்பூ மாலைகளோடு எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந் தார்கள். நண்பன் ரகுராஜன் சுதர்சனனை முகமலர்ந்து வரவேற்றான். ' என்னப்பா ரகு! விடிஞ்சதும் விடியாத துமா மாலையும் கையுமா எங்கேயோ கிளம்பிக்கிட்டிருக் கியே? என்ன விசேஷம்?'- - - பேசிக்கிட்டு நிற்க நேரமில்லை. பெட்டி படுக்கையை -உள்ளாரப் போட்டுட்டு உடனே நீயும் புறப்படு! இன்னிக்கி தம்ம தலைவர் கலம்பகச் செல்வருக்குப் பிறந்தநாள்...'
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/130
Appearance