பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 - பொய்ம் முகங்கள் அறிமுகப் படுத்தி வைத்தான். ரகுராஜன். அவர்கள் வனங்கியதால் சுதர்சனனும் அவர்களைப் பார்த்துப் பதிலுக்குக் கைகூப்பினான். . . . . கேச்-வெட்டறது. தமிழ்ப் பண்பாடு இல்லியே? ஆங்கிலப் பண்பாட்டைப் போயி நம்ம தண்டத்தமிழ் தலைவர் கடைப்பிடிக்கலாமா? சுதர்சனனின் இந்தக் கேள்விக்கு முதலில் அவர்கள் யாருமே மறுமொழி சொல்ல வில்லை. - - . சிறிது நேர இடைவெளிக்குப் பின் ரகுராஜனே சுதர் சனனைப் பதிலுக்குக் கேட்டான். பின்னென்ன? கேக் வெட்டாமே கடா வெட்டிப் பொங்கல் வச்சுக் கறிசோறு போடச் சொல்றியா? அதெல் லாம் நாகரீகமா இருக்காதுப்பா தலைவரோட சிஷ்யன் -ஒருத்தன் அமானுல்லான்னு இங்கே ரொட்டிக் கிடை வச்சி ருக்கான், கேக் அவனோட இலவசத் தயாரிப்பு. வெட் டறது தலைவரோட வேலை. * "இதைக் கேட்டுச் சுதர்சனன் புன்முறுவல் பூத்தான். வெட்டறது தலைவரோட் வ்ேலை- என்ற நண்பனின் இறுதி வாக்கியம்தான் அவனைச் சிரிக்க வைத்திருந்தது. அது இரட்டுறமொழிதலாயிருந்தது. . . . - தெருவில் இரட்டை நாடி உடலமைப்போடு இன் னொருவர் கையில் இதேபோல் மான்லயுடன் எதிர் பட்டார். பார்ப்பதற்குச் சிற்றானைக்குட்டி ஒன்று ஆடி அசைந்து வருவது போல் தோற்றமளித்தார் அந்த ஆள். சார் தான் கெளவை கஜராஜன். சென்னை நகரக் கசாப்பு-மீன்கடை உரிமையாளர் சங்கத் தலைவர். அதோட வள்ளலார் விழாக்குழுச் செயலாளர். வள்ளுவர் மன்றப் புரவலர். அஹிம்சா ஃபோரம் செயற்குழு உறுப்பினர்...' -- இந்தாங்க ரகுராஜன்... எல்லாத்தையும் ஒண்ணாத் சேர்த்துச் சொல்லாதீங்கன்னு உங்களுக்கு எத்தினிவாட்டி