பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பொய்ம் முகங்கள் பக்தனுக்குத்தான் சாமியைக் கும்பிடத் தெரியணும். சாமிக்குப் பக்தனை யாருன்னே தெரிஞ்சிருக்க வேண்டியல் அவசியமில்லே - 'அதான் நான் சாமியே கும்பிடறதே இல்லை,' "சாமியைக் கும்பிடாட்டிப் பரவாயில்லே, தலை: வரைக் கும்பிட்டு ஒரு மாலையைக் கழுத்திலே போட்டுவை. பின்னாலே பிரயோஜனப்படும். வீண் போயிடாது. மாலையை நான் வாங்கிட்டேன். உனக்குச் செலவில்லே. சும்மா கழுத்திலே போடறதுக்குக் கூடவா சோம்பல்?’’ "சோம்பல்னு நான் எப்போ சொன்னேன்? அப்படி. நான் சொல்லவே இல்லையே? சம்மதமில்லேன்னுதான் சொன்னேனே ஒழியச் சோம்பல்னு சொல்லவியே? சோம்: பல்னா-நம்ம மனசிலே விருப்பமிருந்தும் செய்யாமத். தள்ளிப் போடறது. சம்மதமில்லேங்கறது நமம மனசி லேயே விருப்பமில்லைங்கறதைத்தான் குறிக்கும். எனக்கு, மாலை போடச் சம்மதமில்லேன்னு தான் நான் சொன் னேன். நீயா என்னையும் வற்புறுத்திக் கூடக் கூட்டியாற். திருக்கே. அவ்வளவுதான். . • * 'அடசர்த்தான் பெரிசா பிலாஸ்பி-பேசாதேப்பா வான்னாக் கூட வா. நீ மாலை போடாட்டி உன் பேரைச் சொல்லி, ஆதர்சபுரம் தமிழாசிரியர் புலவர் சுதர்சனனார். சார்பில் தலைவர் கலம்பகச் செல்வருக்கு மாலை. அணிவிக்கப்படுகிறது"ன்னு நாங்களே மாலையைத். தலைவர் கழுத்திலே போட்டிட்டுப் போறோம், மாலை எண்ணிக்கைக் கூடனும்கிறதுதான் எங்க கணக்கு என்றான் ரகு. - . - - - , - அந்த டேபிளுக்குக் காபி கொண்டு வந்த சர்வர் கெளவைகஜராஜனைப் பார்த்து, "சார்! போன வாரம் நம்ப பேட்டையிலே பட்டிமன்றத்துக்கு வந்திருந்தீங்களே. நாங்கூடக் கேட்டேன் சார். 'ஜீவகாருண்யமே சாலச் சிறந் தது'ங்கிற கட்சியிலே சிரிக்கச் சிரிக்கப் பேசினிங்க சார்" என்றான். -