பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர். பார்த்தசாரதி : 1.3.3 கஜராஜன், 'நீ வந்திருந்தியா அங்கே?' என்று செர் வரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே காபியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார், - ** arár 字r庁 கஜராஜன்! இப்பவெல்லாம் தலைமை வகிக்கிறதைத் தவிர வேறெதுக்கும் போறதில்லேன்னு எங்கிட்ட பிரமாதமாப் பெருமையடிச்சுக்கிட்டீங்க. இவங்க பேட்டையிலே பட்டிமன்றத்திலே போயி ஒரு கட்சியிலே நின்று பேசியிருக்கீங்களே?' என்று ரகுராஜன் கேட்டார். 'இல்லியே? யார் சொன்னது? அதிலேயும் நான் பேசின கட்சிக்குத் தலைவரா இருந்து தானே பேசினேன்?" என்று கஜராஜனிடமிருந்து பதில் வந்தது. . . . . காபி குடித்துவிட்டு எல்லோரும் புறப்பட்டார்கள். நான் வேணா வீட்டுக்குத் திரும்பிடறேனே? நீங்க போயிட்டு வாங்க போதும். நான் எதுக்கு? என்று மீண்டும் கத்தரித்துக் கொண்டு திரும்பி விட முயன்றான் சுதர்சனன். - - . 15 - ஆனால் ரகு சுதர்சனனை விட்டுவிடத் தயாராக இல்லை. வற்புறுத்தினான். 'முடியாது! நீயும் தலைவருக்கு மாலை போடக் கண்டிப்பாக வந்தாகனும்' என்று அவன் பிடிவாதமாக இருக்கவே சுதர்சனனும் கூடவே போக வேண்டியதாயிற்று. . . . . . தலைவர் கலம்பகச்செல்வர் வீட்டு வாசலில் சிறிய பந்தல் போட்டு வாழைமரம், தோரணம், கட்சிக்கொடிகள் எல்லாம் கட்டியிருந்தன. தொண்டர்கள் நாலைந்து பேர் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சட்டை களில் நெஞ்சுப் பகுதியில் கொடிப் பின்னணியோடு தலை * - - - - பொ-9 - . +.