நா. பார்த்தசாரதி 18 5. கள். கார்ல் மார்க்ஸின் கேபிட்டலையும், லெனினையும் தெளிவாக உருப்போட்டு உணர்ந்திருந்த அவனுக்கு இனம். மொழி என்ற குறுகிய வட்டங்கள் என்னவோ போலிருந் தன. உழைக்கும் இனம்-உழைக்காத இனம் என்ற இரண்டு இனம்தான். உலகில் அவனுக்குத் தெரிந் திருந்தது. - . புத்தாடை-புதுச் சட்டை அணிந்து மலர்ந்த முகத் தோடு தலைவர் கலம்பகச்செல்வர் வீட்டு முன்கூடத்தில் வந்து அமர்ந்தார். . - - எல்லோரும் 'ജ്ഞഖഖ് கலம்பகச் செல்வர் வாழ்க!" என்று பெரிதாகக் குரல் கொடுத்து வாழ்த்தினார்கள். வாழ்த்து ஒலிகள் மூன்று முறை முழக்கப்பட்டன. தலைவர் எல்லாரையும் நோக்கிக் கையமர்த்தி அமைதியாக இருக்கும். படி வேண்டினார். எல்லோரும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் அமைதியடைந்தனர். தலைவர் வேண்டிய அமைதி வந்ததும் அவரே பேசப் போகிறார் என்பதுபோல் தெரிந்தது. நாங்க மாலையைப் போட்டு வணங்கிடலாம்னு பார்க்கிறோம். அப்புறமா ஐயா. பேசலாமே? என்று .ரகு மெல்லக் குறுக்கிட்டான். சரி போட்டுடுங்க." ஒவ்வொருவராக மாலையைத் தலைவர் கழுத்திலணி வித்துவிட்டுச் சாஷ்டாங்கமாக அவர் காலடியில் விழுந்து கும்பிட்டார்கள். சுதர்சனன் தன் கையிலிருந்த மாலையை. யாரும் கவனிக்காத சமயம் பார்த்து ஒரு ஜன்னலோரமாக வைத்துவிட்டுக் கூட்டத்தில் எவரும் கவனிக்காதபடி பின் பக்கமாக மெல்ல நழுவி வெளியேறி விட முயன்றான். அதற்குள் ரகு சுதர்சனனைப் பார்த்துவிடவே. 'வா சுதர்சனம் உன் மாலை எங்கே? கொண்டாந்ததைக் கானோமா?' என்று கூப்பிட்டுவிட்டான். . . . . . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/137
Appearance