3 : 6 - பொய்ம் முகங்கள் "அவரு தமிழ்ப் புல்வர் சுதர்சனம். இன்னிக்குத்தான் ஊர்லேருந்து வந்தாரு' என்று அறிமுகப்படுத்தினான். சுதர்சனன் அப்படியே நின்று அந்தத் தலைவரைக் கை கூப்பினான். மாலையை எடுத்துப் போடவோ மற்றவர் களைப் போல அவரது காவில் விழுந்து கும்பிடவோ முயல. வில்லை. - - தலைவர் அந்தப் புதிய மனிதனின் இணங்கிவராத் தன் மையை மெல்ல உய்த்துணர்ந்ததாகத் தெரிந்தது. "இருபது ஆண்டுகளாகத் தமிழாசிரியர்களுக்குக் கேடயமாக இருந்து பாதுகாக்கும் இயக்கம் நம்முடையது. என்னுடைய அறுபத்தி இரண்டாவது பிறந்த நாளைக்கு, நம்ம இயக்கத்தைச் சேர்ந்த தமிழாசிரியருங்கள்ளாம் சேர்ந்து 'அறுபத்தி மூணு சவரன் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்துக் கொண்டாடினாங்க. "கேக் வந்தாச்சு...அறுபத்தி நாலு மெழுகுவர்த்தி சொருகி அலங்கரிச்சுத் தயாரிக்க இத்தினி நேரமாச்சுன்னு: அமானுல்லா வருத்தப்பட்டாருங்க” என்று ஒரு தொண்டர் கேன் பின் தொடர உள்ளே நுழைந்தார். கேக்கைப் பெரிய தட்டில் வைத்துச் சுமந்து வந்த அமானுல்லா அதைத் தலைவருக்கு முன்னால் இருந்த சிறிய மேஜைமேல் வைத்து விட்டு ஒதுங்கி நின்று கையோடு கொண்டு வந்திருந்த மாலையைப் பிரித்துத் தலைவருக்கு அணிவித்தார். "ஆமா ஐயாவோட அறுபத்து நாலாவது பிறந்த நாளன்னிக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டி நிறுத்துத் தரப் போறோம்னு வேலூர்ப் பொதுக்குழுவிலே ஒரு தர் மானம் நிறைவேற்றினிங்களே. அது என்னாச்சு? என்று. தலைவரே சிரித்தபடி கேட்டார். சுற்றி நின்ற த்ொண்டர் களும், இயக்கத் தோழர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு தொண்டர் துணிந்து. அதற்குப் பதில் சொன்னார்:
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/138
Appearance