பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 137 'அந்தப் பொறுப்பைப் பொதுச் செயலாளர் கிட்ட விட்டிருக்கோம் ஐயா!' . . < "பொதுச் செயலாளர் எங்கே?' "ஐயா பிறந்தநாளை ஒட்டித் திருத்தணியிலே விசேஷ அர்ச்சனை அபிஷேகம்லாம் பண்ணிட்டு வரலாம்னு பொதுச் செயலாளரும் பொருளாளரும் போயிருக்காங்க. பகலுக்குள்ளே எப்பிடியும் திரும்பிடுவாங்க." ' துக்கில்லே. பொதுக்குழுத் தீர்மானத்தை நான் இதுக்குள்ளே மறந்து போயிருப்பேனோன்னு நீங்க நினைக்கக் - கூடாது. . பாருங்க. அதுக்காகத்தான் நினை ஆட்டினேன்...' - - 'அதெப்படீங்க ஐயா மறக்கும்? ஐயாவையும், ஐயா வுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மறந்தா நாங்க நல்வா இருப்போமா?’’ - • - ஒரே குரலில் கோரஸ் பாடுவதுபோல் அவரைச் சுற்றி யிருந்தவர்கள் இதைச் சொன்னதைச் சுதர்சனன் கவனித் தான் அந்தக் கூட்டத்திலேயே ஒதுங்கியும் தனித்தும் நின்றது சுதர்சனன் ஒருவன்தான். மற்ற எல்லாரும் தெய் வத்தின்முன் நிற்கும் பக்தர்களைப்போலக் கைகட்டி வாய் பொத்திப் பயத்தோடும் பக்தியோடும் நின்று கொண்டிருத் தார்கள். ‘. . . சுதர்சனனை நோக்கித் தலைவர் அன்போடு கேட் டார்: 'குமாரமுத்துப் புலவர் எழுதிய கூடற் கல்ம்பகத்தை உலக இலக்கியமாகப் பிரகடனம் செய்து நான் எழுதிய கருத்துக் கலம்பகக் கதிரொளி என்கிற நூல்லப் படிச்சிருக் கிங்களா?' - 'இல்லீங்க. இன்னும், படிக்கல்லே. ஆனால் கூடற் கலம்பகத்தைப்படிச்சிருக்கேன். அது ஒரு நல்ல பிரபந்தம். .பல நயங்கள் நிறைந்தது. உலக இலக்கியம் அதுதான்னு சொன்னால் நாம் அதைத் தவிர உலகத்திலே வேறு