பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 4 {} - பொய்ம் முகங்கள் மனிதகுலத்தைப் பற்றி எந்தத் தலைவரும் கவலைப்படுவ தாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தலைவரிடமும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே காட்ட வெவ்வேறு முகங்கள் இருந்தன. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தனி முகங்காட்ட வேண்டிய சாமர்த்தியத்திலும் தந்திரத்தி லும் அவர்கள் நன்றாகத் தேர்ந்திருந்தார்கள். - • * பழைய சமஸ்தானாதிபதிகளைப் போல ஒவ்வொரு குட்டித் தலைவருக்கும் ஒரு கட்சி, ஒரு கொடி, ஒரு பட்டாளம், ஜெயகோஷம் போடப் பத்துப் பதினைந்து பேர்-எல்லாம் இருந்தார்கள். சாதி பேதமின்றி, மொழி பேதமின்றி விருப்பு வெறுப்புக்களற்ற முறையில் மனித குலத்துக்காகப் பாடுபட முன்வரும் ஒரு எதிர்காலத் தலைவனைத் தேடிச் சுதர்சனன் கவலைப்பட்டான். அறுபத்து நாலாவது பிறந்த தினத்துக்கு 64 சவரன் களைத் தேடும் தலைவர்களும், 50-வது பிறந்த தினத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டும் தலைவர்களுமாகத் தென் பட்டார்களே தவிர ம்க்களுக்கு ஏதாவது தங்களிடமிருந்து "தரக்கூடிய தலைவர்கள் எங்குமே தென்படவில்லை. தட்சிணைக்கு மன்ற்ாடும் பூசாரிகளைவிட மோசமான, தலைவர்கள் தமிழ்நாட்டின் நகரங்களில் மலிந்திருந் தார்கள். - - 16 சுதர்சனன் மறுபடி நடந்தே பெல்ஸ் ரோடுக்குத் திரும்பச் சென்று ரகுவின் மாடியறையைத் திறந்து நீராடி. உடைமாற்றிக் கொண்டு தயாராவதற்குச் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. தலைவரின் பிற்ந்த நாளை வாழ்த்தச் சென்ற ரகுராஜனோ மற்றவர்களோ விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை சுதர்சனனுக்கு இல்லை. அப்போது காலை பத்தரை மணிக்கு மேல் ஆகி விருந்தது. கலம்பகம் டுட்டோரியல் காலேஜுக்கு அன்று