பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巫4罗 பொய்ம் முகங்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் சுதர்சனன் ஓரிரு கணங்கள் தயங்கினான். அதற்குள் அவளே மேலும் பேசினாள்: 'ஓகோ நீங்க மாமாவோட சிநேகிதராக்கும்; ஊர். லேருந்து இப்பத்தான் வந்திருக்கீங்க போலேருக்கு...' ஆமாம் ரகு வெளியிலே போயிருக்கார். எப்ப: வருவார்னு தெரியலெ...' - - சரி. எதுக்கும் ரெண்டு சாப்பாடு வைக்கச் சொல்லி அம்மாகிட்டத் தகவல் குடுத்திடறேன்' என்று தனக்குத். தானேயும் அவனுக்காகவும் சேர்த்துப் பதில் சொன்னது போல் சொல்லிவிட்டு அந்தப் பெண் படியிறங்கிச் சென்றாள். மாடி முகப்பு வரை நடந்து சென்று சுதர்சனன் தெருவைப் பார்த்தான். அந்தப் பெண் பக்கத்து வீட்டிற். குள் நுழ்ைவது தெரிந்தது. அந்த வீட்டுக்காரர்கள் ஒரு மெஸ் நடத்துகிறார்கள் என்றும் புரிந்தது. மாடி வராந்தா வின் முகப்பிலிருந்து திரும்பி அவன் அறை வாசலுக்கு வந்து சேருவதற்குள் வேறு யாரோ படியேறி வருகிற காலடிச் சத்தம் கேட்டது. சுதர்சனன் திரும்பி அறை முகப்புக்கு. வந்தான். - நல்ல சிவப்புக் காவி நிறத் துணியில் தலைப்பாகையும். அந்தத் தலைப்பாகையில் சிறிதாக பாட்ஜ் போல் பொன். வண்ணச் சந்திரப் பிறை வளையமும் அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தென்பட்டார். வலது கையில் குடையும். இடது கையில் தடிமனான ஒரு தோல் பையுமாக அவர் வந்திருந்தார். மூக்கின் மேலிருந்து கீழே சரியும் மூக்குக் கண்ணாடியை அடிக்கடி சரிசெய்து கொண்டார். --- "ரகு இருக்கானா?” - இல்லே, வெளியிலே போயிருக்காரு. நீங்க யாருன்னு: சொல்லுங்க. அவர் திரும்பி வந்தப்புறம் தகவல் சொல்றேன்...' . . . . . . . . . . . . . . . . "