பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பொய்ம் முகங்கள் உடனே செய்துடுவேன். யூனிவர்ஸிடியிலே எனக்குத் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. சிண்டிகேட் சிதம்பர "நாதன் வரார்னா-வி.ஸி-அறைக்கதவைத் திறந்து வெளி யிலே வந்து வாங்கன்னு வரவேற்பார். ரெஜிஸ்திரார் எனக்கு முன்னே உட்கார்ந்து பேசமாட்டான். நீங்க நாலு நம்பர் எங்கிட்டக் குறிச்சுக் குடுத்தீங்கன்னா, நாலும் பாஸ் தான். பிலோ ஆவரேஜ் ஸ்டுடன்ஸுக்கு டிஸ்ட்டிங்ஷன்" வாங்கித் தர்ரதும் உண்டு. அக்டோபர் பரீட்சைக்குக் கலம்பகம் டுட்டோரியல்ஸ்லேயிருந்து ஐம்பது பேர் போனாங்க. காலேஜுக்கு ஒரு குட்வில் வரணும், ஐம்பது பேருமே பாஸ் பண்ணினாத்தான் நல்லதுன்னு ரகு ஆசைப்பட்ட்ான்: ஐம்பது பேரையும் பாஸ் பண்ண வச்சேன், எந்தப் பேப்பரை யார் செட் பண்றாங்க, யார் திருத்தறாங்கங்கிறது எனக்கு அத்துபடி. யூனிவர்ஸிடி என்கிற சமுத்திரத்திலே செவன்த் ஃப்ளிட்' மாதிரி நான் ஒரு சக்தி வாய்ந்த கடற்படைன்னு வச்சுக்குங்க்ளேன்' "அப்படிங்களா? நீங்க சொல்றதை எல்லாம் பார்த் தாச் சொந்தமாகவே தனி யூனிவர்ஸிடி ஒண்னு நடத்தற அளவு அத்தனை திறமை உங்ககிட்ட இருக்கும் போலத் தெரியுதே?’ - . "ஒண்ணென்ன? பத்து யூனிவர்விடி நடித்த முடியும் னேன். ஆனா இந்த சோவில் ஸெர்வீஸ்ல்ே இருக்கிற சந்தோஷம் அதிலே எல்லாம் கிடைக்காதே! "ரகுவை உங்களுக்கு எத்தனை வருஷமாப் பழக் . 5Gլքո2** - - -".” * . . . . . வருஷம் என்ன வேண்டிக்கெடக்கு அவன் டுட்டோ சரியல் காலேஜ் ஆரம்பிச்ச அன்னிக்கிலேருந்து எங்களுக் குள்ளே பழக்கம்தான். இப்போ நீங்கதான் இருக்கிங்க. நாளைக்கே நாலு நம்பரைக் குறிச்சிக் குடுத்துக் கவனிச் சுக்குங்க"-ன்னு எங்கிட்டச் சொன்னா அப்புறம் ஆட்ட மேட்டிக்கா நீங்க நம்ம கஸ்டமர் ஆயிடlங்க. ஏமாத்தறது.